தொப்பை வெண்ணெய் போல் கரைய... ‘இந்த’ சூப்பர் டிரிங்கை தவறாமல் குடிக்கவும்!
தொப்பை கொழுப்பு, உடல் பருமனுக்கு முக்கிய காரணம். பெரும்பாலான மக்கள் இந்த பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இது இதய நோய் மற்றும் நீரிழிவுக்கும் முக்கிய காரணமாகிறது.
இந்தியாவில் பெரும்பாலானோருக்கு, முழு கொழுப்புள்ள பால், நெய், வெண்ணெய் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். இதனுடன், அதிகரித்து வரும் நொறுக்குத் தீனிகளின் நுகர்வு உடல் பருமன் பிரச்சினையை தீவிரமாக்கியுள்ளது. இதன் காரணமாக, வயிற்றைச் சுற்றி கொழுப்பு குவிகிறது, இது தொப்பை கொழுப்பு என்று அழைக்கப்படுகிறது. இது தோற்றதை கெடுப்பதோடு, இதய நோய் மற்றும் நீரிழிவுக்கும் முக்கிய காரணமாகிறது.
வயிற்று கொழுப்பை நீக்க உடற்பயிற்சி மற்றும் உணவு முறை சிறந்த வழி. ஆனால் பலமுறை ஓடினாலும், நேரம் கிடைக்காத காரணத்தினாலும் உடல் எடையைக் குறைக்கும் பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்ய முடிவதில்லை. இந்த நிலையில், உடல் எடையை குறைக்கும் பானத்தை குடிப்பதன் மூலம் தொப்பையை கரைக்கலாம். இந்த பானம் கொத்தமல்லி விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இது விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது. எப்படி என்று தெரிந்து கொள்வோம்...
உடல் எடை அதிகரிப்பது உடனே தடுக்கப்படும்
தனியா எனப்படும் கொத்தமல்லி விதைகளில் கொழுப்பு குறைக்கும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் கலவைகள் உள்ளன. இதன் காரணமாக உணவில் இருந்து கிடைக்கும் கொழுப்புகள், கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைடுகள் உடையாமல் மலத்தில் வெளியேறுகிறது. இப்படி நடக்கும்போது வயிற்றில் கொழுப்பு சேராது.
கொழுப்பு உடனடியாக உருகத் தொடங்குகிறது
கொத்தமல்லி விதைகளின் மற்றொரு நன்மை என்னவென்றால், இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இதன் காரணமாக உடல் கொழுப்பை ஆற்றலாக உருவாக்கி வேகமாக பயன்படுத்துகிறது. அதிக கொழுப்பு எரிக்கப்படும் போது, எடை குறையும் தானாகவே தொடங்குகிறது.
தொப்பை கொழுப்பை கரைக்கும் பானம்
கொத்தமல்லி விதை நீர் அல்லது தனியா நீரை தயாரிக்கும் முறை
1. 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை சுத்தம் செய்து கொள்ளவும்..
2. இப்போது அவற்றை 1 கிளாஸ் தண்ணீரில் ஊற வைக்கவும்.
3. இதனை இரவு முழுவதும் அப்படியே விடவும்.
4. உங்கள் உடை இழப்பு சூப்பர் பானம் தயார். இதனை நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்
எடையைக் குறைக்கும் இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது அதிக பலன் தரும். ஏனெனில், இந்த நேரத்தில் உங்கள் வயிறு காலியாக உள்ளது மற்றும் ஆற்றலுக்கு எந்த ஆதாரமும் இல்லை. இதன் காரணமாக, உடல் கொழுப்பை எரிக்கிறது, இது இந்த செய்முறையின் காரணமாக துரிதப்படுத்தப்படலாம்.
மேலும் படிக்க | கரு முதல் கடைசி வரை ஹார்மோன்களை காப்பாற்றும் துத்தநாக சத்து! பெண்களுக்கு அவசியம்
கோடையில் சக்தி தரும் பானம்
கொத்தமல்லி விதை நீரை குடித்தால் கோடையில் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். இது உடல் எடையை குறைப்பதுடன், உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். இது நீரிழப்பு, வெப்ப சோர்வு, வெப்ப பக்கவாதம் போன்றவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
நீரிழப்பை தடுக்கும் தனியா நீர்
கொத்தமல்லி நீர் நீரிழப்புக்கு மிகவும் நல்லது என்பதோடு, தீக்காயங்கள், பித்த பிரச்சனைகள், அஜீரண பிரச்சனைகள், வயிற்று வலி பிரச்னைகள், காய்ச்சல், வயிற்றுப் புழுக்கள், கர்ப்பம் தொடர்பான கோளாறுகள் போன்றவற்றுக்கும் மிகவும் நன்மை பயக்கும். செரிமானக் குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல், சளி, ஆஸ்துமா, சர்க்கரைநோய், வெள்ளைப்படுதல், சோம்பல் போன்ற பல பிரச்சனைகளுக்கும் இது ஒரு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.
தனியா நீரின் பிற நன்மைகள்
கொத்தமல்லி விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், கண்களில் ஏற்படும் அரிப்பு, அழற்சி மற்றும் கண் சிவத்தல் போன்றவற்றை சரியாக்கவும் பயன்படுகிறது. கொத்தமல்லி விதை ஊற வைத்த நீர் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை இதில் உள்ளது. அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த தண்ணீரை தினமும் குடிக்கலாம். இதனால் சர்க்கரை அளவும் வியக்கத்தக்க வகையில் கட்டுப்படுத்தப்படும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.
மேலும் படிக்க | இந்த கருப்பு மூலிகை ஒன்று போதும்.. நரை முடி நிமிடத்தில் மறந்துவிடும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ