Neem Leaves Water Health Benefits: அதிகாலையில் எழுந்திருப்பது ஒருவருக்கு பல நன்மைகளை தரும். அதிகாலையில் எழுந்து காலை கடன்களை விரைவாக முடித்துகொண்டு உடற்பயிற்சியுடன் உங்களின் நாளை தொடங்குவது பல நன்மைகளை அளிக்கும். காலையில் நிதானமாகவும் ஆரோக்கியமாகவும் செயல்படுவதன் மூலம் அன்றைய நாள் முழுவதுமே நல்ல புத்துணர்ச்சியுடன் இருக்கும் எனலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் ஆயர்வேதத்தில் கூறப்படும் வேப்பிலை நீரை காலையில் அருந்திவிட்டு உங்களின் நாளை தொடங்கினால் உங்களின் கிடைக்கும் ஆரோக்கியம் குறித்து இங்கு காணலாம். நிச்சயம், வேப்பிலை நீர் நாக்கை கசப்புத்தன்மையாக மாற்றும் என்றாலும் உடல் நலனில் ஏற்படுத்தும் நன்மைகளையும் நாம் பார்த்தாக வேண்டும். அதில் ஆண்டிஆக்ஸிடன்ட்களும், அலர்ஜி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்திருக்கின்றன.


வேப்பிலை நீரை செய்வது எப்படி?


மேலும், பல நூறு ஆண்டுகளாக வேப்பிலை உடல்நலனை சீராக்குவதில் பல சமூக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலில், இதில் ஊட்டச்சத்துகளும் நிறைந்திருக்கின்றன. நீரிழிவு, ஆஸ்துமா, அலர்ஜிகள், கீல்வாதம் ஆகிய நோய்களில் இருந்து இந்த வேப்பிலை உங்களை பாதுகாக்கும். ஆயுர்வேதத்தின்படி, காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் இந்த வேப்பிலை நீர் அருந்துவது உடலுக்கு நல்லது என கூறப்படுகிறது. கிருமி சார்ந்த நோய்களையும், அலர்ஜியை ஏற்படுத்தும் நோய்களையும் இவை தடுக்கிறது. 


மேலும் படிக்க | விடாப்பிடியான கொழுப்பும் கரைந்து ஓடும்! ‘இதை’ சாப்பிடுங்க..


வேப்பிலையை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அதனை வடிகட்டி அந்த நீரை மட்டும் அருந்தினாலே போதுமானது. அந்த வகையில், காலையில் எழுந்த உடன் வேப்பிலை நீரை குடிப்பதால் என்னென்ன நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.  


வீக்கத்தைக் குறைக்கிறது


வீக்கத்தை ஏற்படுத்தும் நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வேப்பிலை நீர் நன்மை பயக்கும். இது உடலில் இருந்து வீக்கத்தை குறைக்க உதவும். கீல்வாதம், தோல் அலர்ஜி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனளிக்கும். 


சருமத்திற்கு நல்லது


வேப்பிலை நீரில் கிருமி எதிர்ப்பு பண்புகள் நிரம்பியுள்ளன. அவை எந்த வகையான தோல் பிரச்சனைகளையும் எதிர்த்துப் போராட உதவும். இது முகப்பரு, சரும ஒவ்வாமைகளை குறைப்பதன் மூலம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இது சூரிய ஒளி மற்றும் மாசுபாட்டில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.


நோய் எதிர்ப்பு சக்திக்கு நன்மை பயக்கும்


நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேப்பிலை நீர் சரியான பானமாகும். அவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் உதவும்.


கிருமிகளை எதிர்த்துப் போராடும்


சளி அல்லது காய்ச்சலால் அவதிப்படும் போது, வேப்பிலை சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. அவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும். காய்ச்சல், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் போன்றவைக்கு சிகிச்சையளிக்க வேப்பிலைகள் பயனுள்ளதாக கருதப்படுகிறது.


இரத்த சர்க்கரை அளவு குறையும்


சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலை உணவில் வேப்பம்பூ நீரை அருந்தலாம். இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் என ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது.


பொறுப்பு துறப்பு


வேப்பிலை நீர் குடிப்பதன் மூலம் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பின்விளைவுகளும் ஏற்படலாம். நுரையீரல், சீறுநீரகப் பிரச்னைகள் உள்ளவர்கள் இதனை குடிப்பதை தவிர்க்கவும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். மேலும், இந்த தகவல்கள் அனைத்தும் பொதுவானவை. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.  


மேலும் படிக்க | உச்சி முதல் பாதம் வரை அத்திப்பழத்தின் அற்புதமான நன்மைகள்: முழு லிஸ்ட் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ