இலவங்கப்பட்டை அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த ஒரு மசாலா பொருளாகும். உணவின் சுவையை அதிகரிக்க மக்கள் இலவங்கப்பட்டையைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இலவங்கப்பட்டை டீ குடிப்பதால் உடல் எடை குறையும் என்பது உங்களுக்கு தெரியுமா?ஆம், இலவங்கப்பட்டை தேநீர் உங்களின் உடல் எடையை குறைக்க பெருமளவில் உதவுகிறது. எனவே இன்று நாம் இலவங்கப்பட்டை தேநீர் தயாரிப்பதற்கான செய்முறையை காண உள்ளோம். மேலும் இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் காண உள்ளோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலவங்கப்பட்டை தேநீரின் நன்மைகள்
பொதுவாக இலவங்கப்பட்டை தேநீர் உங்கள் வளர்சிதை மாற்றமும் அதிகரிக்க உதவுகிறது. அதேபோல் இலவங்கப்பட்டை தேநீர் உங்கள் வாய்வு அல்லது வாயு பிரச்சனையை அகற்றவும் உதவுகிறது. இது மட்டுமின்றி, தினமும் இரவு உணவிற்கு அரை மணி நேரம் கழித்து இலவங்கப்பட்டை டீ குடித்து வந்தால், உடல் எடையை நாம் வேகமாக குறைக்க முடியும். எனவே இலவங்கப்பட்டை டீயை எப்படி தயாரிப்பது என்று இப்போது பார்ப்போம்.


மேலும் படிக்க | Weight Loss Tips: உடல் எடையை குறைக்க ரவையா? கடலை மாவா? எது சிறந்தது?


இலவங்கப்பட்டை டீ தயாரிக்க தேவையான பொருட்கள்-
தண்ணீர் ஒரு கப் 
இலவங்கப்பட்டை தூள் ஒரு தேக்கரண்டி 
கருப்பு மிளகு ஒரு சிட்டிகை 
தேன் ஒரு தேக்கரண்டி 
எலுமிச்சை சாறு சிறிது


இலவங்கப்பட்டை தேநீர் தயாரிப்பது எப்படி?
* இலவங்கப்பட்டை தேநீர் தயாரிக்க, நீங்கள் முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை வைக்கவும்.
* பின்னர் அதில் இலவங்கப்பட்டை தூள், கருப்பு மிளகு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
*அதன் பிறகு, கலவையை நன்கு கொதிக்க வைக்கவும்.
* பிறகு ஒரு கோப்பையில் வடிகட்டி தேன் சேர்த்து கலக்கவும்.
* இப்போது உங்கள் ஆரோக்கியமான இலவங்கப்பட்டை தேநீர் தயார். 
* வயிற்றில் உள்ள கொழுப்பை கரைக்க, தினமும் இரவில் இந்த டீயை குடித்து வரவும்.


 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடல் எடை கட்டுக்கடங்காமல் ஏறுதா? இவற்றை பயன்படுத்தினால் சட்டுனு குறையும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ