எடை இழப்பு குறிப்புகள்: உடல் பருமன் இன்று ஒரு மாபெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இந்த பிரச்சனையால் கோடிக்கணக்கான மக்கள் சிரமப்படுகின்றனர். சொல்லப்போனால் இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், சரியான உணவுப் பழக்கம் இல்லாததும், நீண்ட நேரத்துக்கு உடலை எந்த வித நடவடிக்கையும் இல்லாமல் வைத்திருப்பதும்தான் உடல் பருமனுக்கு முக்கியக் காரணம். ஆனால் உடல் பருமன் என்பது ஒரு நோய் மட்டுமல்ல, இதன் காரணமாக இன்னும் பல ஆபத்தான நோய்களும் உங்களை வந்தடையலாம். ஆகையால் எடையைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.
உடல் பருமனில் இருந்து விடுபட பலரும் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். உடல் பருமனை குறைப்பதற்கான எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். இதைப் பயன்படுத்தி நீங்கள் இந்த பிரச்சனைக்கு எளிதாக நிவாரணம் பெற முடியும்.
தேன்
உடல் பருமனை குறைப்பதில் தேன் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும். இஞ்சியை தேனுடன் கலந்து சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும்.
மஞ்சள்
மருத்துவ குணம் கொண்ட மஞ்சளை உட்கொள்வதால் உடல் பருமனை குறைக்கலாம். மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தண்ணீரில் மஞ்சள் கலந்து கொதிக்க வைக்கவும். பின்னர் இதை குடிக்கவும். இப்படி செய்து வந்தால் கூடிய விரைவில் வித்தியாசம் தெரியும்.
மேலும் படிக்க | Weight Loss Tips: 7 நாட்களில் 5 கிலோ எடையை வேகமாக குறைப்பது எப்படி
இலவங்கப்பட்டை
தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் 5 முதல் 6 கிராம் இலவங்கப்பட்டை பொடியை கலந்து 15 நிமிடம் கொதிக்க வைத்து, வெதுவெதுப்பானதும், அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்க்கவும். தினமும் இரண்டு முறை, காலையில் வெறும் வயிற்றில் மற்றும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் இதை குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உடல் பருமனை குறைக்க இது மிகவும் உதவியாக இருக்கும். இது விரைவாக வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மேலும் உடல் பருமனை குறைக்கிறது.
எலுமிச்சை
வைட்டமின்-சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த எலுமிச்சை உடலை பல நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. எடையைக் குறைக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும். எலுமிச்சையுடன் தேன் மற்றும் கருப்பு மிளகு கலந்து சாப்பிட்டால், அது உங்கள் உடலில் உள்ள கொழுப்பை அகற்ற உதவுகிறது.
வெந்தயம்
வெந்தய விதைகளில் கலோரிகள் குறைவு. இதில் நார்ச்சத்தும் உள்ளது. இது உங்கள் எடையை குறைக்க உதவியாக இருக்கும். இது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடை கன்னாபின்னானு ஏறுதா? இதுல கவனம் செலுத்தினா போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ