Health Tips: சிறுநீரகத்தை பாதுகாக்கும் வீட்டு மூலிகை
வீட்டில் பயன்படுத்தும் இந்த மூலிகையை தினமும் குடித்தால் சிறுநீர பிரச்சனைகளில் இருந்து தபித்துக் கொள்ளலாம்.
உடலில் உள்ள அசுத்தங்களை சுத்தப்படுத்தும் பணியை செய்யும் சிறுநீரகம், மிக முக்கியமான பகுதியாகும். ரத்தத்தில் உள்ள அசுத்தங்களையும் சுத்தப்படுத்தி வெளியேற்றும் பெரும் பணியை செய்கிறது. இப்படிப்பட்ட சிறுநீரகம் சரியாக வேலை செய்யவில்லை என்றால் பல பிரச்சனைகள் உருவாகும் அபாயம் உள்ளது. எனவே சிறுநீரகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. அதற்காக தினமும் இந்த பானத்தை உட்கொண்டால், உங்கள் சிறுநீரகம் பத்திரமாக இருக்கும்.
புதினா லெமனேட்
சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க புதினா மற்றும் எலுமிச்சையில் இருந்து தயாரிக்கப்படும் புதினா லேமனேட் பானத்தை குடிக்கலாம். இந்த பானம் தயாரிக்க, ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் எலுமிச்சை சாறு, சிறிது புதினா இலைகள் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து கலக்கவும். இந்த பானத்தை குடிப்பதால் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.
மேலும் படிக்க | கல்லீரல் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்போ இதையெல்லாம் கண்டிப்பா செய்யாதீங்க
மசாலா எலுமிச்சை ஜூஸ்
நீங்கள் கொஞ்சம் காரமானவற்றை விரும்பினால், மசாலா லெமன் சோடா பானத்தை முயற்சிக்கலாம். இதனால் உங்கள் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும். இந்த பானம் தயாரிக்க, ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எலுமிச்சை சாறு, சீரகம்-கொத்தமல்லி தூள், சாட் மசாலா மற்றும் சோடா தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது தயாரிக்கப்பட்ட இந்த பானத்தை குடிக்கவும். இதன் மூலம் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
தேங்காய் தண்ணீர்
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தேங்காய் ஷின்ஜி பானம் ஆரோக்கியமாக இருக்கும். இந்த பானத்தை தயாரிக்க ஒரு குவளையில் தேங்காய் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை எலுமிச்சை சாறுடன் கலந்து குடிக்கவும். இதில் இருக்கும் ஆற்றல் உங்கள் சிறுநீரகத்தை பாதுகாக்க உதவுகிறது.
மேலும் படிக்க | Weight Control Tips: உடல் எடையை குறைக்க 5 நிமிட உடற்பயிற்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ