கல்லீரல் நமது உடலின் இன்றியமையாத பகுதியாகும். இது நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. அது மோசமாகிவிட்டால், சில சமயங்களில் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆகையால், கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டு அவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
குளிர் பானங்கள் மற்றும் சோடாவிலிருந்து விலகி இருங்கள்
குளிர் பானங்கள் மற்றும் சோடா கல்லீரலில் பிரச்சனையை ஏற்படுத்தும். இவற்றில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அவை கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும். இவை உடல் பருமனை அதிகரிக்கின்றன. இது கல்லீரலில் மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும்.
எடையை கட்டுப்படுத்த வேண்டும்
உங்கள் எடை கூடுவது கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும். எடை அதிகரிப்பு உடலில் அதிகப்படியான கொழுப்பை அதிகரிக்கிறது, இது சில நேரங்களில் கல்லீரல் செல்களில் படிந்து அவற்றை சேதப்படுத்தும். எனவே உடற்பயிற்சி செய்து எடையைக் கட்டுப்படுத்துங்கள்.
மேலும் படிக்க | எடையை குறைத்து, முக சுருக்கங்களை நீக்கும் 'White Tea' என்னும் மேஜிக் டீ
வலி நிவாரண மாத்திரைகள் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும்
வலி நிவாரணிகள் கல்லீரலில் மிகவும் மோசமான விளைவையும் ஏற்படுத்துகின்றன. இத்தகைய மருந்துகளை நீண்ட நேரம் உட்கொண்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். மனச்சோர்வு மருந்தும் சில நேரங்களில் இதற்கு காரணமாகிறது. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளும் தவறை செய்யாதீர்கள்.
ஹெபடைடிஸ் கல்லீரலை சேதப்படுத்தும்
ஹெபடைடிஸ் வீக்கம் மற்றும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, ஹெபடைடிஸ் கண்டறியப்பட்டவுடன், உடனடியாக சிகிச்சை பெறவும். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.
துரித உணவு கடுமையான கல்லீரல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்
இது தவிர துரித உணவுகளும் கல்லீரல் பாதிக்கப்படுவதற்கு ஒரு பெரிய காரணமாகும். துரித உணவுகள் நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்க அவற்றில் அஜினோமோட்டோ பயன்படுகிறது. இது உங்கள் கல்லீரலில் உள்ள கொழுப்பை தடுக்கும். இதனால் கல்லீரலின் பணி புரியும் திறன் பலவீனமடைகிறது.
புகைபிடித்தல் கல்லீரலுக்கு ஆபத்தானது
சிகரெட் கல்லீரலையும் சேதப்படுத்தும். சிகரெட் கல்லீரலை மறைமுகமாக பாதிக்கிறது. சிகரெட் புகையில் காணப்படும் நச்சு இரசாயனங்கள் இறுதியில் உங்கள் கல்லீரலை அடைந்து கல்லீரல் செல்களை சேதப்படுத்தும். இது தவிர, நீண்ட நேரம் மது அருந்துபவர்களின் கல்லீரல் செயலிழக்கிறது.
மேலும் படிக்க | Skin Care Tips: முகத்தை பாதுகாக்க இயற்கையான வீட்டு வைத்தியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ