முருங்கை டீ தயாரிப்பது எப்படி: இன்றைய வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப்பழக்கத்தால், உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பு என்பது பொதுவான பிரச்சனையாக ஆகி விட்டது. அதுவும் இடுப்பை சுற்றி படிந்திருக்கும் கொழுப்பைக் குறைப்பது மிகவும் கடினம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தட்டையான வயிற்றை கொடுக்கும் முருங்கை டீ தயாரிப்பதற்கான செய்முறையை இன்று அறிந்து கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முருங்கை மரத்தின் இலைகள், பூ, காய்கள் என எல்லாமே ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. முருங்கைக் கீரையில், நார்ச்சத்து, இரும்புச் சத்து என நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நமது உடலுக்கு தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 அமினோ அமிலங்கள் முருங்கைக் கீரையில் உள்ளது. அதோடு, மற்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில், முருங்கை இலையில் 25 மடங்கு அதிக இரும்புச் சத்து காணப்படுகிறது. எனவே இதனை சாப்பிட்டு வந்தால், ரத்த சோகை வரவே வராது.


பொதுவாக முருங்கை கீரை தொடர்ந்து பயன்படுத்துவது கடினம். ஆனால், அதனை பவடர் வடிவில் சேமித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது மிக எளிதாக இருக்கும். முருங்கை பவுடர் அல்லது பொடி என்பது முருங்கை கீரையை உலர வைத்து தயாரிக்கப்படுகிறது. இந்த பொடியை கொண்டு நாம் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும்.


முருங்கை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம், இது விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது. இது தவிர, முருங்கை பொடி தேநீர் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது மட்டுமின்றி, முருங்கை டீ, கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை நச்சுத்தன்மையாக்குகிறது. முருங்கை கீரையில் உள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக்குகிறது. இதானால் மூட்டு வலி கீல் வாத நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது. முருங்கை இலைகள் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கும், இதய நோயாளிகளுக்கும் இது வரப்பிரசாதம் எனலாம். ஏனென்றால், இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு, கொலஸ்டிராலை எரித்து இதயத்தை காக்கிறது.


மேலும் படிக்க | இந்த கருப்பு மூலிகை ஒன்று போதும்.. நரை முடி நிமிடத்தில் மறந்துவிடும்


முருங்கை தேநீர் தயாரிக்க தேவையான பொருட்கள்:


1. தண்ணீர் 1.5 கப்
2. முருங்கைப் பொடி அரை தேக்கரண்டி
3. தேன் 1 டீஸ்பூன்
4. எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன்


முருங்கை டீ தயாரிக்கும் முறை


1. முருங்கை தேநீர் தயாரிக்க, முதலில் ஒரு பாத்திரத்தை எடுக்கவும்.


2. பிறகு அதில் 1.5 கப் தண்ணீர் மற்றும் அரை டீஸ்பூன் முருங்கை இலை தூள் சேர்க்கவும்.


3. அதன் பிறகு, பாதியாகக் குறையும் வரை நன்கு கொதிக்க வைக்கவும்.


4. பிறகு அடுப்பை அணைத்து, ஒரு கோப்பையில் தேநீரை வடிகட்டவும்.


5. அதன் பிறகு, அதில் 1 தேக்கரண்டி தேன் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்கவும்.


6. பிறகு இதனை நன்றாக கலந்து சாப்பிடவும்.


7. இப்போது உங்கள் தொப்பை கொழுப்பை கரைக்கும் முருங்கை டீ தயார்.


8. இதனை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள கொழுப்பு குறைய ஆரம்பிக்கும்.


9. இனிப்பு பிடிக்காதவர்கள், தேன் எலுமிசம் பழத்திற்கு பதிலாக, கருப்பு மிளகு தூள் மற்றும் கருப்பு உப்பு சேர்த்து, வடிகட்டி குடிக்கலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கரு முதல் கடைசி வரை ஹார்மோன்களை காப்பாற்றும் துத்தநாக சத்து! பெண்களுக்கு அவசியம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ