எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான கிரீன் டீ கல்லீரலை பாதிக்கும்!

கிரீன் டீயில் ஃபிளவனால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஃபீனாலிக் அமிலங்கள் போன்ற பாலிஃபீனாலிக் கலவைகள் உள்ளன. இவை உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சிறப்பு ஆக்ஸிஜனேற்றிகள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 15, 2023, 01:12 AM IST
  • கிரீன் டீயினை சரியான முறையில், சரியான நேரத்தில், சரியான அளவில் குடிக்க வேண்டும்.
  • இல்லை என்றால், கிரீன் டீ கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
  • கிரீன் டீயை குடித்தால் உடல் எடை குறையும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான கிரீன் டீ கல்லீரலை பாதிக்கும்! title=

இன்றைய காலகட்டத்தில் காபி, டீ யை விட கிரீன் டீ குடிக்கும் போக்கு மிகவும் அதிகரித்துள்ளது. கிரீன் டீயை குடித்தால் உடல் எடை குறையும் என்று மக்கள் நம்புகிறார்கள். உடல் எடையை குறைக்க இதில் அதிக அளவு மருத்துவ குணம் உள்ளது என்று நினைப்பதால் அனைவரும் கிரீன் டீயை குடிக்கும் பழக்கத்திற்கு மாறி வருகின்றனர்.  கிரீன் டீயில் ஃபிளவனால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஃபீனாலிக் அமிலங்கள் போன்ற பாலிஃபீனாலிக் கலவைகள் உள்ளன. இவை உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சிறப்பு ஆக்ஸிஜனேற்றிகள். உடல் பருமனை குறைத்தல், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் போன்ற பல அற்புதமான பண்புகள் கொண்டுள்ள கிரீன் டீ நிச்சயமாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால், இந்த அனைத்து ஆரோக்கிய நன்மைகளை பெற வேண்டும் என்றால், கிரீன் டீயினை சரியான முறையில், சரியான நேரத்தில், சரியான அளவில் குடிக்க வேண்டும். இல்லை என்றால், கிரீன் டீ கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்

வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பது நல்லதல்ல

க்ரீன் டீ குடிப்பது நிச்சயம் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் காலையில் அதை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது என்கின்றனர் நிபுணர்கள். காலையில் க்ரீன் டீ குடிப்பது அமில பிரச்சனையை ஏற்படுத்தும். க்ரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வலுவான பாலிபினால்கள் நிறைந்துள்ளன. இது வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், வயிற்றில் வீக்கம், வாயு போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கிரீன் டீயை உணவுக்கு இடையில் அல்லது உணவு உண்ட பிறகு  எடுத்துக் கொண்டால் மட்டுமே ஆரோக்கிய பலன்களை அடையலாம். கிரீன் டீயுடன் சில பிஸ்கட்கள் அல்லது சில ஆரோக்கியமான சிற்றுண்டிகளை சாப்பிடலாம். ஆனால், அதை வெறும் வயிற்றில் குடிக்கவே கூடாது. மேலும், கிரீன் டீ வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் என்பதால், நாள் முழுவதும் க்ரீன் டீ குடித்துக்கொண்டே இருக்க கூடாது. இதனால், கல்லீரலுக்குப் பாதிப்பு ஏற்படலாம்: கிரீன் டீயில் கேடசின் அதிகம் இருப்பதால், காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

மேலும் படிக்க |  உடல் பருமன் குறைய.. காலை உணவில் சேர்க்க வேண்டியதும்... சேர்க்க கூடாததும்..!

நாள் ஒன்றுக்கு எவ்வளவு கிரீன் டீ குடிக்கலாம்?

நாள் ஒன்றுக்கு 1-2 கப் க்ரீன் டீ குடிப்பது நல்லது. அதிகப்படியான கிரீன் டீ  நச்சுத்தன்மையை ஏற்படுத்தி, உங்கள் கல்லீரலை சேதப்படுத்தும். எனவே, ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கோப்பைகளுக்கு மேல் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மேலும், சாப்பிட்ட உடனேயே  க்ரீன் டீயைக் குடிக்க கூடாது. இது அமிலத்தன்மை, வீக்கம் போன்றவற்றுக்கு வழிவகுக்கும்  எனவே, உணவு அருந்திய பின் 30 - 45 நிமிடங்களுக்கு பின் கிரீன் டீ அருந்துவது நல்லது.

மலச்சிக்கல்

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தேவைக்கு அதிகமாக க்ரீன் டீயை அருந்தக்கூடாது. பொதுவாக ஒரு நாளைக்கு 3 முதல் 4 கப்புக்கு மேல் க்ரீன் டீ குடித்தால் அது ஆபத்தாகலாம்.

ரத்த சோகை 

கிரீன் டீயை அதிகமாக உட்கொண்டால், உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படலாம். இது தவிர, உங்கள் பசி எடுக்காது. இதன் காரணமாக போதுமான சத்து கிடைக்காமல் உங்கள் உடலும் பலவீனமடையக்கூடும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Dementia: இளம் வயதினருக்கும் மறதி நோய் வருமா? ஷாக் காெடுக்கும் சமீபத்திய சர்வே..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News