கல்லீரல் பாதிப்பை முன்கூட்டிய கண்டுபிடிக்கலாம்! ‘இந்த’ 6 அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க..
Liver Disease Symptoms : கல்லீரல் பாதிப்பு, மனிதர்களின் உடலுக்கு பெரிதளவில் தீங்கு விளைவிக்கும் பாதிப்பாக பார்க்கப்படுகிறது. இதை 6 அறிகுறிகளை வைத்து முன்கூட்டியே கண்டுபிடிக்கலாம்.
Liver Disease Symptoms : நமது முழு உடலும் சரியாக செயல்பட காரணமாக இருக்கும் பாகங்களுள் ஒன்று, கல்லீரல். ஊட்டச்சத்துக்கள் முதல் நச்சுகள் வரை அனைத்தையும் அயராது உடலில் தங்க வைப்பதற்கும் வெளியேற்றுவதற்குமான வேலைகளை பார்க்கிறது. ஆனால், இதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் விஷயம் விபரீதமாக வாய்ப்பிருக்கிறது. கல்லீரல் நோயை முன்கூட்டியே கண்டறிவது அதை முன்கூட்டியே தவிர்க்கவும் உதவும். இதற்கு 6 அறிகுறிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
1.சோர்வு மற்றும் பலவீனமாக தோன்றுவது:
நாளின் இறுதியில் சோர்வாக உணர்வது சகஜமான விஷயம்தான். ஆனால் தொடர்ந்து சோர்வு மற்றும் பலவீனம் போன்ற உணர்வு ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்வது நல்லது. ஏனெனில் அது கல்லீரல் நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
2.கல்லீரல் இழைநார் வளர்ச்சி:
இதை ஆங்கிலத்தில் Spider Angiomas என குறிப்பிடுகின்றனர். நுரையீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு சிலந்தி வலை போல, உடலில் ரத்தம் ஆங்காங்கே காணப்படும். இது பார்ப்பதற்கு மிகச்சிறியதாக இருந்தால், மிகக்கொடிய நோயின் அறிகுறியாக இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. இதை கழுத்து, முகம், கால் உள்ளிட்ட பகுதிகளில் பார்க்கலாம். உடலின் எஸ்ட்ரோஜென் அளவு குறைந்தால் மெட்டபாலிச ஹார்மோன்கள் வலுவிழக்கும். அது போன்ற சமயத்தில் இவை தோன்றலாம்.
3.நுரையீரல் இருக்கும் இடத்தில் வலி:
வயிற்றின் மேல் வலது பக்கத்தில் அசௌகரியம் அல்லது வலி போன்ற உணர்வு ஏற்படுவது நுரையீரல் நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். இந்த பகுதியில்தான் உங்கள் கல்லீரல் இருக்கிறது. மேலும் குறிப்பிட்டிருந்த இடத்தில் ஏதேனும் வலி ஏற்பட்டால் அது வீக்கம் அல்லது பெரிதாகிய கல்லீரலைக் குறிக்கலாம். கொழுப்பு கல்லீரல் நோய், ஹெபடைடிஸ் அல்லது சிரோசிஸ் போன்ற நிலைமைகளுக்கு இது வழிவகுக்கும்.
4.பசியின்மை:
திடீரென பசியின்மையுடன் உணருவது, நுரையீரல் நோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். காரணம், நாம் சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது, கல்லீரல். எனவே, அது சரியாக செயல்படாமல் இருக்கும் போது நமக்கு பசியின்மை போன்ற உணர்வு ஏற்படலாம். இதனால் சாப்பிட பிடிக்காது, பசியும் ஏற்படாது. இதனால் எடை இழப்பு அபாயங்களும் ஏற்படலாம்.
5.சருமத்தில் அரிப்பு:
சருமத்தில் அவ்வப்போது ரேஷஸ், அல்லது அதிக அரிப்பு ஏற்பட்டால் அது கல்லீரல் நோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். கல்லீரலில் பிரச்சனை ஏற்படும் போது ரத்தத்தில் உப்பு கலக்கலாம். இதனால், சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் உண்டாகலாம்.
6.எடை இழப்பு:
எடை குறைக்க வேண்டும் என்று மனதில் வைத்து எடை இழப்பது வேறு. ஆனால், இது போன்ற நோய்களுக்கு நாம் எடையை இழப்பது வேறு. காரணமே இன்றி, திடீரென்று எடை குறைந்தால், அதற்கு கல்லீரல் நோய் பாதிப்பு காரணமாக இருக்கலாம். கல்லீரல் பாதித்திருக்கும் போது உடல், நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் புரதங்களை எடுத்துக்கொள்ளாது. இதனால், காரணமே தெரியாமல் எடை குறையும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ