Easy Yoga Asanas For Beginners : யோகாசனங்கள், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்காெள்வதற்கும், ஒட்டுமொத்த ஆராேக்கியத்திற்கும் உதவும் உடற்பயிற்சிகளுள் ஒன்று. இதில் கைதேர்ந்தவர்கள், உடற்கொழு்பபை குறைப்பதற்கும், தொப்பையை குறைப்பதற்கும் பல்வேறு யோகாசனங்கள் உள்ளன. ஆனால், உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைக்கும் அனைவராலும் அனைத்து யோகாசனங்களையும் செய்ய இயலாது. அப்படி, சிம்பிளாக செய்யக்கூடிய யோகாசனங்களின் லிஸ்டை பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தடாசனா:


இந்த சிம்பிளான யோகாசனம், ஒருவரை மலை போல கம்பீரமான உறுதியுடன் நிற்க வைக்கிறது. இந்த ஆசனத்தை நின்று கொண்டே செய்யலாம். இதை செய்கையில், மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும். 


எப்படி செய்ய வேண்டும்?


>நேராக நிற்க வேண்டும்
>கைகளை இரு பக்கமும் நீட்ட வேண்டும்
>கைகளை இரு கரம் கூப்பி, தலைக்கு மேல் உயர்த்தி நேராக நிற்க வேண்டும். 



விருக்‌ஷாசனா:


ஆரம்ப நிலை யோகாசனங்களுள், இதுவும் ஒன்று. இந்த ஆசனம் செய்வதால் கவனச்சிதறல் ஏற்படாமல் தடுக்கலாம். 


எப்படி செய்வது?


>நேராக நிற்க வேண்டும்
>ஒரு காலை தூக்கி உங்கள் தொடையின் சைடில் வைத்து நிற்க வேண்டும்
>இரு கரம் கூப்பு சில நிமிடங்கள் நேராக நிற்க வேண்டும்


த்ரிகோனாசனா:


இந்த ஆசனம், நல்ல மூச்சு பயிற்சியாக இருக்கும். இந்த ஆசனம் செய்தால், கைகள் மற்றும் கால்களுக்கு வலு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.


எப்படி செய்வது?


>இரண்டு கால்களையும் விரித்து வைத்து நிற்க வேண்டும்
>பின்னர், முட்டியை மடக்காமல் ஒரு கையால் ஒரு காலை தொட வேண்டும்
>நேராக நின்று, இன்னொரு கையை வைத்து இன்னொரு காலை தொட வேண்டும். 


வீரபத்ராசனா:


யோகா பயிற்சியில் வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை வளர்ப்பதற்கு வீரபத்ரசனா ஆசனம் உதவும். இது பலருக்கு, தன் நம்பிக்கையைத் தருகிறது. மேலும், இடுப்பு மற்றும் தொடை சதைகளை குறைக்கவும் உதவுகிறது. அதே நேரத்தில் முழு கீழ் உடலையும் வலிமையாக்க உதவுகிறது. 


மேலும் படிக்க | மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? கூடுமா? பதில் இதோ!


எப்படி செய்ய வேண்டும்?


>உடலை நேராக நிமிர்த்தி நிற்க வேண்டும்
>இரு கால்களையும் அகட்டி, இரு கைகளையும் மேல் நோக்கி தூக்க வேண்டும். அப்படி தூக்கும் போது உங்கள் வலது பக்க முட்டி மட்டும் மடங்க வேண்டும்.
>இடது கால் பாதத்தை 60 டிகிரிக்கு திருப்பி, வலது பாதத்தை 90 டிகிரிக்கு திருப்ப வேண்டும்
>இப்படியே இடது கால் முட்டியையும் மடக்கி செய்ய வேண்டும்.


அதோ முக்கா ஸ்வானாசனா:


முதுகு பக்கம், இடுப்பு மற்றும் கைகளை ஸ்ட்ரெட்ச் செய்ய இந்த யோகாசனத்தை செய்ய வேண்டும். இதனால், பின்பக்கம் ஏற்படும் வலி சரியாகும். 


எப்படி செய்ய வேண்டும்?


>முதலில் இரு கால்களையும் சேர்த்து நேராக நிற்க வேண்டும்
>பின்னர் மெல்ல இரு கைகளையும் தரையில் வைத்து, உங்கள் இடுப்பை மேல் நோக்கி தூக்கவும்
>இப்படியே சில நிமிடங்களுக்கு நின்று மூச்சை இழுத்து விடுங்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Acidity Problem: வாயுத்தொல்லையா? இந்த உணவுகள் பக்கமே போகாதீங்க!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ