முள்ளங்கியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் பயன்கள்
Benefits Of Radish: முள்ளங்கி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை. அதே நேரத்தில், முள்ளங்கியைப் போலவே, முள்ளங்கி விதைகளும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே, முள்ளங்கியை தினமும் உட்கொண்டு வந்தால், என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
முள்ளங்கியின் ஆரோக்கிய நன்மைகள்: முள்ளங்கி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பெரும்பாலான மக்கள் முள்ளங்கியை சாலட் அல்லது சாம்பாரில் போட்டு உட்கொள்கிறார்கள். முள்ளங்கியைப் போலவே, முள்ளங்கி விதைகளும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், முள்ளங்கி விதையில் வைட்டமின் சி, புரதம், கால்சியம் போன்ற குணங்கள் உள்ளன, அவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். மறுபுறம், முள்ளங்கி சாப்பிட்டால் இதயக் கோளாறுகள் வராது. எனவே முள்ளங்கி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
முள்ளங்கி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்-
இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்
முள்ளங்கி விதையில் உள்ள விதைகள் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனை உட்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும். முள்ளங்கி விதைகளில் ஃபிளாவனாய்டுகள் காணப்படுகின்றன, இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மறுபுறம், நீங்கள் ஏற்கனவே இதய நோயாளி அல்லது BP நோயாளியாக இருந்தால், முள்ளங்கி விதைகளை கட்டாயம் உட்கொள்ளவும்.
மேலும் படிக்க | மாதவிடாய் காலத்தில் பப்பாளி சாப்பிடலாமா... நிபுணர்கள் கூறுவது என்ன!
சருமம் ஆரோக்கியமாக இருக்கும்
முள்ளங்கி விதைகள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை உங்கள் சருமத்தை குணப்படுத்தும். அதே நேரத்தில், உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் இருந்தால், நீங்கள் முள்ளங்கி விதைகளை உட்கொள்ளலாம்.
சிறுநீரக கல்லில் நிவாரணம் தரும்
முள்ளங்கி விதையில் இதுபோன்ற பல பண்புகள் இருப்பதால் சிறுநீரக கற்களை குறைக்க உதவுகிறது. நீங்கள் சிறுநீரகக் கல்லால் சிரமப்படுகிறீர்கள் என்றால், முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முள்ளங்கி விதையில் உள்ள பண்புகள் ஆக்ஸாலிக் அமிலத்தை உடைக்க வேலை செய்கின்றன. அதனால்தான் சிறுநீரகத்தில் கல் இருந்தால் கண்டிப்பாக முள்ளங்கி சாப்பிட வேண்டும் என்கின்றனர்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தீராத உடல் வலியா.... சில எளிய ‘ஆயுர்வேத’ சிகிச்சைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ