மாதவிடாய் காலத்தில் பப்பாளி சாப்பிடலாமா... நிபுணர்கள் கூறுவது என்ன!

மாத விடாயின் போது அடிவயிற்றில் வலி, இடுப்பு வலி போன்ற பிரச்சனைகளை மெனோபாஸ் காலம் வரை அனுபவிக்கும் சில பெண்களும் உள்ளனர். வயிறுவலி உபாதை தாங்காமல் பலரும் மாத்திரைகளை சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 4, 2023, 02:57 PM IST
  • கர்ப்ப காலத்தில் பழுத்த பப்பாளி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
  • சில உணவுகள் மாதவிடாயின் போது ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்
  • சில உணவுகள் மாதவிடாய் வலியை அதிகரிக்கும்.
மாதவிடாய் காலத்தில் பப்பாளி சாப்பிடலாமா... நிபுணர்கள் கூறுவது என்ன! title=

பெண்கள் மாதவிடாய் சமயத்தில் சந்திக்கும் உபாதையில் முக்கியமானது வயிறுவலி. மாத விடாயின் போது அடிவயிற்றில் வலி, இடுப்பு வலி போன்ற பிரச்சனைகளை மெனோபாஸ் காலம் வரை அனுபவிக்கும் சில பெண்களும் உள்ளனர். வயிறுவலி உபாதை தாங்காமல் பலரும் மாத்திரைகளை சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. ஆனால், அதனால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதால், மாதவிடாய் கால வயிறுவலிக்கு மாத்திரை எடுத்துகொள்வதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் பொதுவாக அறிவுறுத்துகின்றனர்.

மாதவிடாய் காலங்களில், வயிற்று வலி தவிர அசௌகரியம் மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. பல சமயங்களில் பசி அதிகமாகவும், சில சமயங்களில் எதையும் சாப்பிட மனமில்லாமல் இருக்கும். ஆனால் மாதவிடாய் காலத்தில் நீங்கள் எந்த வகையான உணவை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

சில உணவுகள் மாதவிடாயின் போது ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும், சில உணவுகள் வலியை அதிகரிக்கும். அதனால்தான் அவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல, பப்பாளி ஆரோக்கிய நன்மைகள் அதிகம் கொண்ட பழமாகும். எனினும், இதனை மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடலாமா கூடாதா என்ற குழப்பம் ஏற்படுகிறது. இது குறித்து நிபுணர்களின் கருத்து என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

கர்ப்ப காலத்தில் பழுத்த பப்பாளி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் பச்சை பப்பாளியை சாப்பிட வேண்டாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். உண்மையில், பழுக்காத பப்பாளியில் லேடெக்ஸ் மற்றும் பாப்பைன் நிறைந்துள்ளது. இது கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகளையும், கருப்பைச் சுருக்கத்தைத் தூண்டுவதன் மூலம் ஆரம்பகால பிரசவ வலியையும் தூண்டும். அதே நேரத்தில், மாதவிடாய் காலங்களிலும் பழுக்காத பப்பாளி சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | நீரிழிவு முதல் யூரிக் அமிலம் வரை... பார்லி நீர் செய்யும் மாயங்கள்! தயாரிப்பது எப்படி!

மாதவிடாய் காலத்தில் பப்பாளி பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

1. இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

பப்பாளி கருப்பையின் தசைகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். கூடுதலாக, பப்பாளியில் உள்ள கரோட்டின் உள்ளடக்கம் வலி அல்லது பிடிப்புகளில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது.

2. மாத விடாய் சுழற்சியை மேம்படுத்தும்

பப்பாளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கருப்பையின் தசைகள் சுருங்க உதவுகிறது. உடலில் வெப்பத்தை உண்டாக்குவது மட்டுமின்றி, இதில் கரோட்டின் உள்ளது. பப்பாளி உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

மேலும் படிக்க | நீரிழிவு முதல் யூரிக் அமிலம் வரை... பார்லி நீர் செய்யும் மாயங்கள்! தயாரிப்பது எப்படி!

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க |  சிறுநீரகத்தின் சக்தியை இரட்டிபாக்கும் ‘சில’ அற்புத மூலிகைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News