இந்த கோடைக்காலத்தில் வெப்பத்தைத் தணிக்கும் உணவுகள் பல உள்ளன. வெப்பத்தை தணிக்கும் சில உணவுகள் நமது பட்ஜெட்டுக்கு ஒத்ஹ்டு வராமல் இருக்கும். நடுத்தர வர்க்கத்தினரின் பட்ஜெட்டுக்கு ஏற்ற கோடைகால உணவுகள், உங்களை குளிர்ச்சியடையச் செய்து குளுமையாக்க உதவும்.
  
கோடை காலம் வந்தவுடனேயே வெப்பமும், வறட்சியும் அதிகரிக்கும். அதிக அளவு தண்ணீர் குடிப்பது, குளுமை தரும் உணவுகளை உண்பது என நமது உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் இந்த கோடைக்காலத்தில் மாறிவிடுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துரதிர்ஷ்டவசமாக, பலருக்கு, கோடைக்கால வெப்பத்தைத் தாங்க முடியாது. அதிகரித்து வரும் வெப்பத்தினால் ஏற்படும் சங்கடங்களைப் போக்க கோடைக்காலத்தில் பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளையே பயன்படுத்தலாம். 


மேலும் படிக்க | தொப்பையை கரைக்கும் 3 மேஜிக் பானங்கள்


இவை, சூரியன் தகித்தாலும் அதை காதலிக்கும் மனோபாவத்தைக் கொடுக்ப்பவை. இந்த கோடைக்கால உணவுகள் உங்களை குளிர்விக்க உதவும்


வெப்பநிலை அதிகரித்து வருவதால், சுட்டெரிக்கும் சூரியன் சக்தியை உறிஞ்சி வெளியேற்றி, நீரிழப்பு ஏற்படும். இந்த சிக்கலை தவிக்கும் உணவுகள் எவை? சரும மருத்துவர் கீதிகா மிட்டல் குப்தா சமீபத்தில் தனது சமூக ஊடக கணக்கில் பகிர்ந்து கொண்ட இந்த உணவுகள் பட்ஜெட்டுக்கு உட்பட்டு, உடல் எடையை அதிகரிக்கச் செய்யாமல் குளுமையாக்கும்.


தர்பூசணி
ஒரு சுவையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பழம் தர்பூசணி. வெப்பத்தை வெல்ல உதவும் ஆரோக்கியமான பழங்களில் ஒன்றான தர்பூசணியில் 92% நீர்சத்து உள்ளது. தர்பூசணியில் லைகோபீன், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் A, B6 மற்றும் C, பொட்டாசியம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது.


இந்த ஆரோக்கியமான பழம் உடலை குளிர்ச்சியடையச் செய்வது மட்டுமின்றி, எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் பயனளிக்கும் குறைந்த கலோரிகளைக் கொண்ட பழம் ஆகும்.  



 


வெள்ளரிக்காய்


கோடையில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு வெள்ளரிக்காய். உடலின் நச்சுத்தன்மையை நீக்கி சருமத்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்திருக்கும் வெள்ளரிக்காயில் 95 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது.இந்த சூப்பர்ஃபுட் "உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலின் நீர்ச்சத்தை தக்கவைக்கிறது..


செலரி
அதிக அளவு தண்ணீர் கொண்ட மற்றொரு உணவு செலரி. இதில் 95 சதவீதம் நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் இருப்பதால், தேவையான திரவ அளவை உயர்த்த இது ஒரு நல்ல வழி. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சுத்தப்படுத்தவும், வயதாவதை மெதுவாக்கவும் உதவுகின்றன.


தயிர்
நீங்கள் இனிப்பு அல்லது புளிப்பை விரும்பினாலும், தயிர் உங்கள் கோடைகால உணவில் எளிதாக சேர்க்கக்கூடியது. வெளியில் மிகவும் சூடாக இருக்கும்போது, ​​உங்கள் உணவில் தயிர் சேர்த்துக்கொள்வது (Beat the heat with curd) மிகவும் நல்லது. தயிர் மட்டும் தான், எந்த பருவத்துக்கும் ஏற்ற உணவு.  எக்காலத்துக்கும் ஏற்ற குளிர்ச்சியான தயிரில் பல சத்துக்கள் நிரம்பியிருக்கிறது.  


மேலும் படிக்க | வாய் பிளக்க வைக்கும் வாழைப்பழ மாஸ்க்


காலிஃபிளவர்
காலிஃப்ளவரில் வைட்டமின் சி மற்றும் பல தாதுக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்தது. காலிஃபிளவரில் அதிக நீர்ச்சத்து இருப்பதால், அது அதிக சத்தானதாகவும், நீரேற்றமாகவும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


கோடைகாலத்தில் விலக்க வேண்டிய உணவுகள்  
ஐஸ்கிரீமை அதிகமாக சாப்பிடுவது அல்லது குளிர்பானங்களைக் குடிப்பது போன்றவை அந்த நேரத்துக்கு குளிச்சியைக் கொடுத்தாலும், இவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன. 


குளிர்ச்சியான குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் ஆகியவை நமது உடலின் குளிரூட்டும் செயல்முறையை பாதிக்கலாம். அதுமட்டுமல்ல, பல்வேறு சிக்கல்களுக்கும் இவை வழிவகுக்கும் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன.


அதேபோல, வெயில் காலத்தில் காபி, வறுத்த உணவுகள் மற்றும் சூடான பானங்களைத் தவிர்ப்பதும் நல்லது, இது உடலின் தன்மையை மாற்றும். அதோடு, உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும், மேலும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) 


மேலும் படிக்க | துளசியில் இருக்கும் மருத்துவ குணங்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR