வாய் பிளக்க வைக்கும் வாழைப்பழ மாஸ்க்: முகம் பளிச் என்று பளபளக்கும்

Banana Face Mask: வாழைப்பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் சிலிக்கா காரணமாக, இது நமது சருமத்தை மேம்படுத்துவதாக கருதப்படுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 23, 2022, 01:26 PM IST
  • வெயிலிலிருந்து சருமத்தை பாதுகாக்க வாழைப்பழ மாஸ்க் பயன்படுத்தலாம்.
  • பளபளப்பான சருமத்திற்கு வாழைப்பழ மாஸ்க் பயனளிக்கும்.
  • வறண்ட சருமத்திற்கு வாழைப்பழ மாஸ்க் நல்லது.
வாய் பிளக்க வைக்கும் வாழைப்பழ மாஸ்க்: முகம் பளிச் என்று பளபளக்கும் title=

வாழைப்பழம் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கான சிறந்த பழங்களில் ஒன்றாகும். வாழைப்பழத்தை சாபிடுவதால், உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. இதைத் தவிர வாழைப்பழத்தில் பிற நன்மைகளும் உள்ளன.

கூந்தல் முதல் தோல் பராமரிப்பு வரை, பலவிதமான தோல் பிரச்சனைகளுக்கு ஒரு ஒப்பற்ற வைத்தியமாக வாழைப்பழ பேக்குகள் பிரபலமடைந்து வருகின்றன.

வாழைப்பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் சிலிக்கா காரணமாக, இது நமது சருமத்தை மேம்படுத்துவதாக கருதப்படுகிறது. இருப்பினும், இத்தகைய நன்மைகள் மருத்துவ அமைப்புகளில் பரவலாக ஆய்வு செய்யப்படவில்லை.

வாழைப்பழ மாஸ்கின் நன்மைகள்
வாழைப்பழங்களுக்கான மேற்பூச்சு பயன்பாடுகளைக் கருத்தில் கொள்ளும்போது, ​​​​சிலிகானின் ஒத்த அம்சம் கொண்ட சிலிக்கா மிகவும் குறிப்பிடத்தக்க பொருட்களில் ஒன்றாக உள்ளது. வாழைப்பழத்தில் உள்ள சிலிக்கா கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இவை சருமத்தை நீரேற்றமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும் இயற்கை புரதங்களாகும்.

வாழைப்பழத்தில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவற்றில் சில சரும ஆரோக்கியத்திற்கு உதவும். வாழைப்பழத்தில் காணப்படும் முக்கிய கூறுகள் பின்வருமாறு:

- பொட்டாசியம்
- வைட்டமின் பி-6
- வைட்டமின் சி
- வைட்டமின் ஏ-வின் தடங்கள்

முகச் சுருக்கங்களுக்கு வாழைப்பழ மாஸ்க்
நமக்கு வயதாகும்போது, ​​​​தோலில் உள்ள கொலாஜனை இழப்பது இயற்கையானது. கொலாஜன் இழப்புகள் சருமத்தை இறுக்கமாக்கி, மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் வருவதை அதிகரிக்கலாம்.

வாழைப்பழ மாஸ்க், சிலிக்கா வழியாக கொலாஜனை அதிகரிக்க உதவும் என்று கருதப்படுகிறது. இதன் மூலம் சுருக்கங்களின் தோற்றத்தை இது குறைக்கிறது. 

பளபளப்பான சருமத்திற்கு வாழைப்பழ மாஸ்க்
வாழைப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. உங்கள் சருமத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்களைப் பயன்படுத்துவது ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும். இதன் மூலம் சருமம் அதிக பளபளப்பாக இருக்கும். 

முகப்பருவுக்கு வாழைப்பழ மாஸ்க்
வாழைப்பழங்களில் தேயிலை மர எண்ணெய், பென்சாயில் பெராக்சைடு அல்லது சாலிசிலிக் அமிலம் போன்ற பருக்களை எதிர்த்துப் போராடும் பொருட்கள் இல்லை என்றாலும், அவை வைட்டமின் ஏ மூலம் சருமத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, முகப்பரு வராமல் தடுப்பதாகக் கருதப்படுகிறது. 

முகப்பரு தழும்புகளுக்கு வாழைப்பழ மாஸ்க்
வாழைப்பழங்கள் வைட்டமின்கள் ஏ மற்றும் சி உதவியுடன் தோலில் உள்ள ஹைப்பர் பிக்மென்டேஷனைக் குறைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது முகப்பரு வடுக்கள் மற்றும் வெயிலால் ஏற்படும் புள்ளிகளுக்கு நிவரணம் அளிக்கும். 

வெயிலிலிருந்து பாதுகாக்க வாழைப்பழ மாஸ்க்
ஒரு முக மாஸ்க், உங்கள் தினசரி சன்ஸ்கிரீனுக்கு மாற்றாக அமைய முடியாது என்றாலும், வாழைப்பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை சூரியனால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க உங்கள் சருமத்தின் இயற்கையான திறனை அதிகரிக்கக்கூடும். வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ ஆகியவை இந்த செயலில் குறிப்பிடத்தக்க வகையில் உதவும். 

வறண்ட சருமத்திற்கு வாழைப்பழ மாஸ்க்
சிலர் வாழைப்பழங்கள் வறண்ட சருமத்திற்கு உதவும் என்று கூறுகின்றனர். வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி-6 மற்றும் பொட்டாசியம் இதில் பெரும் உதவியாக இருக்கலாம். 

முன்னெச்சரிக்கைகள் மற்றும் சாத்தியமான பக்க விளைவுகள்
வாழைப்பழத்தால் பக்க விளைவுகள் வருவது மிக அரிதான விஷயமாகும். லேடெக்ஸ் அலர்ஜி எனப்படும் வாழைப்பழ ஒவ்வாமை உள்ளவர்கள் வாழைப்பழ மாஸ்கை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மகரந்த ஒவ்வாமையும் உங்களை வாழைப்பழ ஒவ்வாமைக்கான நிலைக்கு கொண்டு செல்லலாம். 

வாழைப்பழ மாஸ்க் பயன்படுத்தி, அதனால் ஒவ்வாமை ஏற்பட்டால், அதன் எதிர்வினையின் அறிகுறிகள் பின்வருமாறு:

- தோல் அரிப்பு 

- சிவப்பு சொறி அல்லது படை நோய்

- தோல் வீக்கம்

- தும்மல்

- மூச்சுத்திணறல் மற்றும் பிற ஆஸ்துமா அறிகுறிகள்

வாழைப்பழங்களுக்கு கடுமையான ஒவ்வாமை எதிர்வினையும் சாத்தியமாகும். இது அனாபிலாக்ஸிஸ் எனப்படும் உயிருக்கு ஆபத்தான நிலை. இதற்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுகிறது. சுவாசிப்பதில் சிரமம், முகம் வீக்கம் மற்றும் மயக்கம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

வாழைப்பழங்கள் லேடெக்ஸ் குடும்பத்தில் உள்ள மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் தொடர்புடையவை. பின்வரும் காய்கறிகள் /  பழங்களுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள், வாழைப்பழத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும்:

- ஆப்பிள்கள்
- அவகாடோ
- கிவி
- உருளைக்கிழங்கு
- தக்காளி
- செலரி
- கேரட்
- முலாம்பழங்கள்
- பப்பாளி

மேலும் படிக்க | இளநரை, பொடுகுப்பிரச்சனையா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் உதவும் 

வாழைப்பழ மாஸ்க் செய்வது எப்படி? எப்படி பயன்படுத்துவது?

வாழைப்பழ மாஸ்கின் முக்கிய மூலப்பொருள் ஒரு பழுத்த, கூழாக்கப்பட்ட வாழைப்பழமாகும். சிலர் வாழைப்பழத்தோலை சருமத்தில் தேய்ப்பதுண்டு. எனினும், வாழைப்பழ மாஸ்க் செய்வதற்கான வழிமுறை மாறுபட்டது. 

உங்கள் தோல் பராமரிப்பு இலக்குகள் என்ன என்பதைப் பொறுத்து, வாழைப்பழத்துடன் பிற பொருட்கள் சேர்க்கபப்டுகின்றன. பிசைந்த வாழைப்பழம் பின்வரும் பொருட்களுடன் நன்றாக வேலை செய்யும் என்று கூறப்படுகிறது:

- வறண்ட சருமம், ஆய்லி சருமம் மற்றும் முகப்பருவு அதிகம் உள்ளவர்கள் வாழைப்பழத்தில் தேன் சேர்த்து மாஸ்க் செய்யலாம். 

- அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி துளைகளை சுத்திகரிக்க கிளேவை பயன்படுத்தலாம். 

- வடுக்களை குறைக்க, எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழங்களின் சாறு உதவும்

- ஈரப்பதம் மற்றும் இனிமையான விளைவுகளுக்கு தயிர் சேர்க்கலாம்

- மஞ்சள் தூள், முகப் பிரகாசத்தை அதிகரித்து கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருவை குறைக்கும். 

தேவையான பொருட்கள் கிடைத்தவுடன், இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

- ஒரு கிண்ணத்தில் அனைத்து பொருட்களையும் கலக்கவும். ஒரு சமமான பேஸ்டை உருவாக்க, சரியான அளவு தண்ணீர் சேர்க்கவும். 

- முகத்தை ஒரு முறை நன்றாக கழுவவும். 

- சுத்தமான, வறண்ட சருமத்திற்கு சமமாக மாஸ்கை தடவவும்.

- 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே இருந்துவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 

- சருமத்தை உலர்த்தி, மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும்.

- வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இதை செய்யலாம். 

பயன்பாட்டிற்குப் பிறகு சருமம் சிவத்தல் அல்லது சொறி ஏற்பட்டால் தோல் மருத்துவரை அணுகவும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News