நீரிழிவு முதல் வலுவான எலும்புகள் வரை... ஆரோக்கியத்தை அள்ளித் தரும் பழுப்பு அரிசி!
வெள்ளை அரிசிக்கு ஆரோக்கியமான மாற்றான பிரவுன் ரைஸ், எனப்படும் பழுப்பு அரிசியை இன்று பலர் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர்.
பிரவுன் ரைஸ், எனப்படும் பழுப்பு அரிசி என்பது தூய்மை படுத்தபடாத, பளபளப்பு இல்லாத ஒரு முழு தானியம் ஆகும். நெல்லின் மேல் தோலை நீக்குவதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. பழுப்பு அரிசியானது சத்துக்கள் மிக்க தவிடு மற்றும் நெல்லின் உள் அடுக்கை தக்கவைத்து கொண்டிருக்கும். வெள்ளை அரிசியை ஒப்பிடும்போது மிகவும் சத்துக்கள் நிறைந்தது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
அரிசியைப் பொறுத்தவரை, பெரும்பாலானோர், அரிசியை விட பழுப்பு அரிசி சிறந்தது என கருதுகின்றனர். வெள்ளை அரிசிக்கு ஆரோக்கியமான மாற்றாக இதை பார்க்க முடியும். இருப்பினும், இந்த இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு அவற்றின் தயாரிப்பில் மட்டுமே உள்ளது. வெள்ளை அரிசியைப் பற்றி பேசுகையில், இது மிகவும் பதப்படுத்தப்படுகிறது, இதனால் அதன் வெள்ளை நிறத்தை மேலும் மேம்படுத்த பாலிஷ் செய்யப்படுகிறது. இந்த செயல்முறையில் அரிசியின் தோல் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அகற்றப்படுகின்றன. ஏனெனில் நெல்லின் தோலிலேயே சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. அதே சமயம் பழுப்பு அரிசியின் தோல் அகற்றப்படாமல் இருப்பதால் அதன் சத்துக்கள் அப்படியே இருக்கும். பிரவுன் ரைஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகளை பற்றி இன்று அறிந்து கொள்ளலாம்
பிரவுன் ரைஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்
1. ஊட்டச்சத்து நிறைந்த பழுப்பு அரிசி
வெள்ளை அரிசியை விட பழுப்பு அரிசி அதிக ஊட்டச்சத்தை அளிக்கிறது. ஏனெனில் பழுப்பு அரிசியின் தோல் அடுக்கு முழுமையாக அகற்றப்படவில்லை. இது தவிர, வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும்போது பழுப்பு அரிசியில் மாங்கனீசு ஏராளமாக உள்ளது. இது நமது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இதுமட்டுமல்லாமல், பழுப்பு அரிசியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரித்து உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
2. எடை இழப்புக்கு உதவும் பழுப்பு அரிசி
பிரவுன் அரிசியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது நமது எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. நார்ச்சத்து நம் வயிற்றுக்கு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை கொடுக்கிறது, இதன் காரணமாக நாம் குறைவான உணவை உண்கிறோம். மேலும் நமது அதிகரித்த எடை படிப்படியாக கட்டுக்குள் வரும். உடல் பருமன் தொப்பை கரையும்.
மேலும் படிக்க | டயட்... ஜிம் எதுவும் தேவையில்லை... கொழுப்பை கரைக்கும் அற்புதமான ‘7’ பானங்கள்!
3. ஆரோக்கியமான இதயம்
நார்ச்சத்து மற்றும் பல வகையான சத்துக்கள் நிறைந்த பிரவுன் ரைஸ், நமது இதயம் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்த பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள லிக்னான் கலவை நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
4. நீரிழிவு நோய் - இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது
வெள்ளை அரிசியை விட பழுப்பு அரிசியின் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவாக உள்ளது. அதாவது நமது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது. குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் நமது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றன.
5. வலுவான எலும்புகள்
கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழுப்பு அரிசி நமது எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இது தவிர வெள்ளை அரிசியை விட பழுப்பு அரிசியும் சாப்பிட சுவையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | 30 நாள் நோ சுகர் டயட்: நம்ப முடியாத நன்மைகள்.. ட்ரை பண்ணி பாருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ