டீ குடிச்சா இவ்வளவு நல்லதா? மன அழுத்தத்தை குறைக்கும் எலக்காய் தேநீர்
Benefits Of Tea With Cardamom: அற்புதமான நன்மைகளை வழங்கும் ஏலக்காய் டீ மன அழுத்தத்தை குறைப்பது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது என பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது
புதுடெல்லி: காலையில் எழுந்தவுடன் தேநீர் குடிக்கும் வழக்கம் பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. காலையில் குடிக்கும் டீ மட்டுமல்ல, நாள் முழுவது எப்போது வேண்டுமானாலும் தேநீர் குடிக்கும் பழக்கம் பலருக்கு உள்ளது. தேநீரில் ஏலக்காய் சேர்த்துக் கொள்வது, அதன் சுவையை மேலும் அதிகரிக்கிறது. ஏலக்காய் டீ குடிப்பது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஏலக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
ஏலக்காயின் மருத்துவ குணங்கள்
ஏலக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஏலக்காயில் வைட்டமின்கள், மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் பல நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகின்றன, ஏலக்காய் டீ குடிப்பதால் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறி செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.
ஏலக்காயில் 45% ஆல்பா-டெர்பினோல், 27% மைர்சீன், 8% லிமோனீன், 6% மெந்தோன், 3% பீட்டா-ஃபெல்லான்ட்ரீன், 2% 1,8-சினியோல், 2% சபினீன் மற்றும் 2% ஹெப்டேன் போன்ற சேர்மங்கள் உள்ளன. ஏலக்காய் டீ குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
மேலும் படிக்க | உடல் பருமனால் பிரச்சனையா? வேகமா குறைக்கலாம்.. வெள்ளை மிளகை இப்படி சப்பிடுங்க
ஏலக்காய் டீ குடிப்பதன் நன்மைகள்
செரிமானம்: ஏலக்காயில் நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கல், அஜீரணம் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் இது உதவும்.
வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது: ஏலக்காயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது வாய் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி: ஏலக்காயில் வைட்டமின் சி உள்ளது, இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். வைட்டமின் சி உடலில் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இதய ஆரோக்கியம்: ஏலக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.
அழற்சி எதிர்ப்பு பண்புகள்: ஏலக்காய் அழற்சியை குறைக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.\
ஆக்ஸிஜனேற்ற பண்புகள்: ஏலக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. ஃப்ரீ ரேடிக்கல்கள் மன அழுத்தம் மற்றும் வயதானதால் ஏற்படும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | உடலின் இந்த பகுதியில் நெய் தடவினால் கண்கள் மற்றும் வெள்ளை முடி பிரச்சனை நீங்கும்!
ஏலக்காய் டீ செய்முறை
ஏலக்காய் தேநீர் தயாரிக்க, ஒரு கப் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் தேநீர் தூள் சேர்த்து 5-10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். தேநீரை வடிகட்டி, சுவைக்கேற்ப சர்க்கரை அல்லது தேன் சேர்க்கவும். ஏலக்காய் டீயை நாளின் எந்த நேரத்திலும் குடிக்கலாம், ஆனால் காலையில் குடித்தால், முழுப் பயனும் கிடைக்கும்.
ஏலக்காய் டீ எச்சரிக்கை
ஏலக்காய் டீ குடிக்கும் முன் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் ஏதேனும் மருந்துகளை எடுத்துக் கொண்டால், ஏலக்காய் டீயைக் குடிப்பதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும், ஏலக்காய் ஒவ்வாமை இருந்தால், நீங்கள் ஏலக்காய் டீ குடிக்கக்கூடாது.
(பொறுப்புத் துறப்பு:அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் அடிப்படியில் எழுதப்பட்ட கட்டுரை இது. உடல்நலம் தொடர்பான எதை படித்தாலும், அதை பின்பற்றுவதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெறவும்.)
மேலும் படிக்க | Eating disorder: சாப்பாட்டு விஷயத்தில் இவ்வளவு இருக்கா? உடற்பருமன் உண்ணுதல் கோளாறா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ