என்ன செஞ்சாலும் உடல் எடை குறையலையா? இந்த தவறுகளை செய்யாதீங்க
எடை இழப்பு குறிப்புகள்: உடல் எடையை குறைக்கும்போது உணவைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம், ஆனால் எடையைக் குறைக்கும் செயல்பாட்டில், நாம் சில தவறுகளைச் செய்கிறோம், அவை என்னவென்று பார்ப்போம்.
உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது ஏற்படும் பொதுவான தவறுகள்: ஒவ்வொரு மனித உடலுக்கும் அதன் சொந்த தேவைகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க முயற்சிப்பது சில சமயங்களில் ஏமாற்றமளிக்கும் செயலாக இருக்கலாம். நமது அன்றாட தேவைக்கேற்ப, நமது உணவு மற்றும் பானங்களில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும், அப்போதுதான் விரும்பிய முடிவுகளை நாம் அடைய முடியும். உங்கள் முயற்சிகளுக்குப் பிறகும், தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பு குறையவில்லை என்றால், உங்கள் பக்கத்தில் இருந்து ஏதோ தவறு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே எடையைக் குறைக்கும் செயல்பாட்டில், நாம் சில தவறுகளைச் செய்கிறோம், அவை என்னவென்று பார்ப்போம்.
நீங்கள் உடல் எடையை குறைக்கும் போது இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள்
மேலும் படிக்க | நீரிழிவு நோயை ஓட விரட்டும் பிரியாணி இலை; பயன்படுத்தும் முறை!
1. அதிகளவு ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது
ஆரோக்கியமான உணவை உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது மற்றும் பல உணவு நிபுணர்கள் உடல் எடையை குறைக்கும் போது அவ்வாறு செய்ய பரிந்துரைக்கின்றனர். நட்ஸ், வேர்க்கடலை மற்றும் அவகோடா போன்ற உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக காணப்படுகின்றன, ஆனால் இதில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம். இந்த ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், என்றால் அது தவறு, அளவுக்கு அதிகமாக இது போன்ற உணவை உட்கொண்டால் நன்மைக்கு பதில் தீங்கு விளைவிக்கக்கூடும்.
2. புரத உட்கொள்ளலைக் குறைத்தல்
ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க, தினசரி புரதத்தை சம அளவு சாப்பிடுவது அவசியம், ஆனால் நீங்கள் புரதம் சார்ந்த உணவை குறைவாக சாப்பிட்டால், எடை குறைப்பது கடினம். எடை இழப்புக்கு புரதம் அவசியம், ஏனெனில் இது கொழுப்பைக் குறைக்கவும் தசையை உருவாக்கவும் உதவுகிறது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பலர் போதுமான புரதம் இல்லாத உணவுகளை உட்கொள்கிறார்கள்.
3. எண்ணெய் உணவுகளை உண்ணுதல்
இந்தியாவில் எண்ணெய் உணவுகளை உண்ணும் போக்கு மிக அதிகமாக உள்ளது, ஆனால் உடல் பருமன் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பால், நீங்கள் எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது, எண்ணெய் உணவைத் தவிர்க்கவும். பாட்டிலில் இருந்து எண்ணெய் விடுவதற்கு பதிலாக ஆயில் ஸ்ப்ரேயைப் பயன்படுத்தலாம், இது எண்ணெயின் பயன்பாட்டைக் குறைக்க உதவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உங்களுக்கு Low Blood Pressure இருந்தால் இந்த 4 பொருட்களை உடனடியாக சாப்பிடுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ