உங்களுக்கு Low Blood Pressure இருந்தால் இந்த 4 பொருட்களை உடனடியாக சாப்பிடுங்கள்

இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம், அப்படி கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால், உடல் மிகவும் பாதிக்கப்படலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 14, 2022, 04:16 PM IST
  • இரத்த அழுத்தத்திற்கான உணவுகள்
  • குறைந்த இரத்த அழுத்த உணவு
  • பிபி குறைவாக இருக்கும் போது இவற்றை சாப்பிடுங்கள்
உங்களுக்கு Low Blood Pressure இருந்தால் இந்த 4 பொருட்களை உடனடியாக சாப்பிடுங்கள் title=

குறைந்த இரத்த அழுத்த உணவு: நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், இரத்த அழுத்தத்தை நார்மல் அளவில் வைத்திருப்பது முக்கியமாகும். இது அதிகரித்தால் அல்லது குறைந்தால், பல தீவிர நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. பொதுவாக நாம் அடிக்கடி உயர் இரத்த அழுத்தத்தைப் பற்றி தான் பேசுகிறோம், ஆனால் குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களும்  அதிகம் உள்ளனர். சாதாரண இரத்த அழுத்தம் 120/80 ஆக இருக்கும், ஆனால் அது 90/60 ஐ எட்டினால் அது குறைந்த அளவில் இருக்கிறது என்பதாகும், பின்னர் இதனால் ஹைபோடென்ஷன் பிரச்சனை எழுகிறது, இது கவலைக்குரிய விஷயமாகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் நுரையீரலில் மோசமான விளைவு ஏற்படுகிறது. எனவே எந்த பொருட்களை உட்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம் என்பதை அறிந்துக்கொள்வோம்.

இரத்த அழுத்த குறைவாக இருக்கும் போது இவற்றை சாப்பிடுங்கள்

1. காபி
நீண்ட நேரம் உணவு உண்ணாமல் இருக்கும் போது இரத்த அழுத்தம் குறையும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் காபியை உடனே அருந்த வேண்டும், ஏனெனில் அதில் உள்ள காஃபின் குறைந்த இரத்த அழுத்தத்தை சாதாரணமாக அதிகரித்து உடனடியாக நிவாரணம் பெறும்.

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை கட்டுபடுத்த உதவும் கொய்யா இலை 

2. உப்பு
குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பு சாப்பிட வேண்டும். அதன்படி உப்பை எலுமிச்சைப் பழம் அல்லது ஏதேனும் ஒரு உணவு பொருட்களுடன்  கலந்து சாப்பிடலாம். இது உங்கள் உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுக்கும்.

3. பாதாம் பருப்பு
பாதாம் பருப்பின் நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம், ஆனால் இந்த பாதாம் பருபு குறைந்த இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதற்கு இரவில் சிறிது பாதாமை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவைத்து அரைத்து சாப்பிட்டு அந்த தண்ணீரையும் குடித்து வரவும். இது இரத்த அழுத்தத்தை சரிப் படுத்த உதவும்.

4. தண்ணீர்
உங்கள் உடலில் நீர் பற்றாக்குறை இருந்தால், அது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். பொதுவாக சுகாதார நிபுணர்கள் தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். உடலை நீரேற்றமாக வைத்திருக்க, எனவே நீங்கள் இளநீர் அல்லது எலுமிச்சை தண்ணீர் குடிக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவு நோயால் அவதியா? சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியம் உதவும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News