சமீபகாலமாக கோவிட் தொற்று பலரது வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது, இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சரியானவர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்படுகிறது.  1-3 சதவீதத்தினர் பிங்க்ஐ எனப்படும் கண் சம்மந்தப்பட்ட நோயால் பாதிக்கப்படுகின்றனர்.  சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, கோவிட் நோய் தொற்று பாதிக்கப்பட்ட 6 மாதங்களுக்கு பிறகு கண்களின் விழித்திரையில் உள்ள ரத்த நாளங்களில் அசைப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர், இதன் காரணமாக சிலருக்கு பார்வை இழப்பு ஏற்பாடு அபாயம் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை கூடுமா? உண்மை என்ன


த்ராம்போஎம்பாலிக் எனப்படும் ரத்தநாள அடைப்புகளை கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்துகிறது என்பது தெரியவந்துள்ளது.  இவ்வாறு ரத்த நாளங்கள் அடைபடுவதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுகிறது.  மேலும் கூடுதலாக இது கண் நரம்புகளுக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகளை உருவாக்குவதால் கண் பார்வை இல்லத்துக்கு வழிவகுக்கிறது.  வயது மூப்படைந்தவர்களுக்கு விழித்திரை நரம்பில் அடைப்பு ஏற்படுவது என்பது பொதுவான விஷயமாகும், விழித்திரை வாஸ்குலார் நோய் 55 வயதுக்கு மேற்ப்பட்ட சிலரிடம் காணப்படுகிறது.  ஆனால் இது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புகைபிடித்தல் மற்றும் ஹைபர்லிபிடேமியா போன்றவற்றாலும் இந்நோய் பாதிப்பு ஏற்படுகிறது.



இந்த கொரோனா தொற்றானது கஞ்சக்டிவிட்டிஸ், ஆர்பிடல் மியூக்கோ மைக்கோசிஸ், ஆப்டிக் நியூரோபதி, ரெட்டினோ வாஸ்குலார் டிஸார்டர், யூவெய்ட்டிஸ் மற்றும் நியூரோ-ஆப்தமாலஜிக்கல் டிஸார்டர் போன்ற கண் சம்மந்தமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.  பெரும்பாலும் இந்த நோய்கள் ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளையும் காட்டுவதில்லை, சிறிது நாட்கள் கழித்து பார்வையிழப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.  முதலில் மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு வேண்டும், ஏதேனும் கண்ணில் சிறிய அளவில் பாதிப்பு இருப்பதாக தெரிந்தாலும், தக்க சமயத்தில் உரிய மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்வது அவசியமானதாகும்.


மேலும் படிக்க | Health News: கோடைகாலத்தில் பூண்டு சப்பிடலாமா, கூடாதா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR