எடை குறைப்பு குறிப்புகள்: உடல் எடையை குறைக்க நாம் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். குறிப்பாக தொப்பை வந்துவிட்டால், அதை சரி செய்வது மிக கடினமாகிவிடுகிறது. உடல் எடையை குறைக்க நமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது மிக அவசியமாகும். எடை அதிகரிப்பதற்கு உங்கள் உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. அதிக எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு. அதிகரிக்கும் எடையை குறைப்பது அனைவருக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. உடலில் உள்ள கொழுப்பை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடையைக் குறைக்கும் பானங்கள்


பச்சைக் காய்கறிகளை விட, வெளியிலிருந்து வாங்கும் பொருட்களையும், பதப்படுத்தப்பட்ட பொருட்களையும் நாம் அதிகமாக உட்கொண்டால், நமது உடலில் நச்சுகள் (Toxins) சேர்வதும் அதிகமாகும். நச்சுகள் காரணமாக, பல நேரங்களில் நாம் நமது உடல் கனமாக இருப்பதாக உணர ஆரம்பிப்போம், உடலின் உப்பசமும் அதிகமாகும். இதன் காரணமாக வயிறு பெரிதாகும். இது மட்டுமின்றி, நமது சருமத்துடன் சேர்ந்து இது நமது கூந்தலையும் பாதிக்கும்.  


இப்படிப்பட்ட நிலையில், டீடாக்ஸ் பானங்களை (Detox Drinks) குடித்தால் நாம் இந்த நச்சுகளை அகற்ற முடியும்.  டீடாக்ஸ் பானங்களை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். இதை எப்படி செய்வது என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். இந்த டீடாக்ஸ் பானங்கள் செரிமானத்தை நன்றாக வைத்து, எடையைக் குறைப்பதில் (Weight Loss) திறம்பட செயல்படுகின்றன.


டீடாக்ஸ் பானங்கள் செய்முறை 


இஞ்சி தேநீர்


இஞ்சி டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதிலும், வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளை நீக்குவதிலும் நமக்கு உதவி கிடைக்கும். இது ஒரு நல்ல டீடாக்ஸ் பானமாக செயல்படுகின்றது. இஞ்சியை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் அரை தேக்கரண்டி தேன் கலந்து குடிக்கவும்.


எலுமிச்சை மற்றும் வெள்ளரி தண்ணீர்


இந்த டீடாக்ஸ் பானத்தை தயாரிக்க, வெள்ளரிக்காயை வெட்டி ஒரு கிளாஸ் தண்ணீரில் போடவும். அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து நீங்கள் இதை குடிக்கலாம். இந்த டீடாக்ஸ் பானம் குறைந்த கலோரி மற்றும் எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.


மேலும் படிக்க | சிக்கென்ற உடல்வாகு வேண்டுமா? நோய்கள் இல்லா வாழ்வுக்கு ஆளி விதையை இப்படி சாப்பிடுங்க


கேரட் மற்றும் ஆரஞ்சு சாறு


இந்த டீடாக்ஸ் பானம் பசியைக் குறைக்கிறது. இதனால் நீங்கள் தேவையற்ற, ஆரோக்கியமற்ற பொருட்களை சாப்பிடுவது கட்டுப்படுத்தப்படுகின்றது. இந்த பானம் நார்ச்சத்து நிறைந்தது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது. அதை செய்ய, ஆரஞ்சு மற்றும் கேரட் கலந்து அதன் சாறு எடுத்து அதை குடிக்கவும்.
 
ஸ்ட்ராபெரி மற்றும் இலவங்கப்பட்டை


இந்த டீடாக்ஸ் பானத்தை தயாரிக்க, ஸ்ட்ராபெர்ரிகளை வெட்டி தண்ணீரில் கலக்கவும். அதில் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை கலக்கவும். இந்த டீடாக்ஸ் தண்ணீரை வெறும் வயிற்றிலும் குடிக்கலாம். இது உடல் பருமனை குறைக்க உதவுகிறது.


லஸ்ஸி


லஸ்ஸி ஒரு நல்ல டீடாக்ஸ் பானம் ஆகும். தயிர் புரோபயாடிக்குகளின் நல்ல மூலமாக உள்ளது. இது குடல் பாக்டீரியாவை குறைக்கிறது. இதுவும் எடை மேலாண்மைக்கு உதவும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | அழகாக வயதாக வேண்டுமா? வயதானாலும் நிம்மதியாக வாழ, உங்கள் வீட்டில் இதெல்லாம் இருக்கா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ