நமது உடலில் வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை பொறுத்தது. கல்லீரல் பாதிப்பு என்பது பல சயமங்களில் உயிருக்கு ஆபத்தாக ஆகி விடும். சோர்வு மற்றும் பலவீனம் போன்ற பொதுவான அறிகுறிகள், கல்லீரல் பாதிப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். படிப்படியாக, மஞ்சள் காமாலை, கால் வீக்கம், வயிற்றில் நீர் நிரம்புதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட ஆரம்பிக்கும். கல்லீரல் 80 சதவீதம் அல்லது அதற்கு மேல் சேதமடையும் போதுதான் இந்நோயின் கடுமையான அறிகுறிகள் தோன்றும். இதனால், இரத்த வாந்தி, குழப்பம் அல்லது சுயநினைவு இழப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் நுரையீரல் நோய் ஆகியவை ஏற்படலாம். கல்லீரல் நோய் தொடர்பான அறிகுறிகளை கண்ட உடனேயே,  முறையான பரிசோதித்து பரிசோதனை செய்து கொண்டால் அதனால் ஆரம்ப நிலையிலேயே பிரச்சனையை சரி செய்து விடலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொழுப்பு கல்லீரலில் சாப்பிட வேண்டிய உணவுகள்


கொழுப்பு கல்லீரலை கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துமாறு  மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உங்கள் உடல் எடை முன்பை விட 10 சதவீதம் குறைக்கப்பட வேண்டும். கலோரிகள் குறைவாக உள்ள உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு வரம்பில் இருக்க வேண்டும். கூடுதலாக, நோயாளிகளின் உணவில் நார்ச்சத்து மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்த உணவுகள் இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | நீரிழிவு முதல் ஆஸ்டியோபோரோசிஸ் வரை... பச்சை வெங்காயம் செய்யும் மாயங்கள்!


நோயாளிகள் சாப்பிடக் கூடாத அசைவ உணவுகள்


கல்லீரல் பாதிப்புக்குள்ளாகும் போது அசைவ உணவில் இருந்து முற்றிலும் விலகி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மருத்துவர் கூறினார். ஆனால் அதிக நிறைவுற்ற கொழுப்பைக் கொடுக்கும் அசைவ உணவுகளை உண்ணக் கூடாது. அதாவது சிவப்பு இறைச்சி, ஆட்டிறைச்சி போன்றவை.


நோயாளிகள் சாப்பிட கூடிய  அசைவ உணவுகள்


சிக்கன் மற்றும் மீன் உணவுகள் கல்லீரல் நோயில் சாப்பிடக்கூடிய இரண்டு அசைவ உணவுகள். ஏனெனில் சிக்கன் கறியில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாகவும், மீனில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமாகவும் உள்ளது. அதே நேரத்தில், இரண்டு உணவுகளும் புரதத்தின் சிறந்த ஆதாரங்கள்.


நோயாளிக்கு ஒரு நாளைக்கு தேவையான புரத அளவு


மருத்துவரின் கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும் உங்கள் உடல் எடைக்கு ஏற்ப 1 கிலோ எடைக்கு1 கிராம் புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது உங்கள் எடை 50 கிலோவாக இருந்தால், ஒரு நாளைக்கு 50 கிராம் புரதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் விருப்பப்படி சைவம் அல்லது அசைவ உணவுடன் எடுத்துக் கொள்ளலாம்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)


மேலும் படிக்க |  தைராய்டு பிரச்சனைக்கு தீர்வைத் தரும் ‘சூப்’... தயாரிக்கும் முறை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ