எவ்வளவுதான் சத்தா சாப்பிட்டாலும், தூங்கினாலும் சோர்வு மட்டும் போகவே இல்லை என அங்கலாய்ப்பவர்கள் ஏராளம். சோர்வுக்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு என அடுக்கிக் கொண்டே போகலாம். எல்லாத்தையும் ஆராய்ச்சி பண்ணி பாத்தாச்சு ஆனா ரொம்ம்ம்ப அசதி  போகவேயில்லை என கவலைப்படாதீர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 அப்பப்ப வெளிய சுத்தறவங்களுக்கு மட்டுமல்ல, சூரிய வெளிச்சம் படாம வீட்டுக்குள்ளயே சொகுசா கிடக்கறவங்களுக்கும் சோர்வு வரும். காரணம் வைட்டமின் டி. அசைவ சாப்பாடு வெளுத்துக்கட்டுபவர்களுக்கு வைட்டமின் டி அதிகமாகவே இருக்குமாம். ஆனால் மத்தவங்களுக்கு சூரிய ஒளியில இருந்துதான் இந்த சத்தை வாங்கிக்கணும். இது குறைவா இருந்தா கொரோனா ஈஸிசா வந்து ஒட்டிக்குமாம்.


ALSO READ | கொரோனா பயத்துல குழம்பாதீங்க… தேவையில்லாம யோசிச்சு பதறாதீங்க..!!!


அதெல்லாம் சரிங்க… எனக்கு வைட்டமின் டி சரியான அளவுலதான் இருக்குன்னு எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு கேட்கறீங்களா/. உங்களுக்காகத்தான் இந்த தகவல்.


 ஏறக்குறைய 200 மரபணுக்களின் செயல்பாடுகளை வைட்டமின் டி-தான் கட்டுப்படுத்துகிறது. உடல் வளர்ச்சியிலும் இதற்கு மிக முக்கிய பங்கு உண்டு. சராசரியாக இந்த வைட்டமின் டி, 30 நானோ கிராம் அளவுக்கு இருக்க வேண்டும். அதற்கும் குறைவாக இருந்தால் போதிய அளவு இல்லை என்று பொருள். 20 முதல் 29 வரை உள்ளவர்களுக்கு சிகிச்சை, மருந்து மாத்திரைகள் தேவையில்லை. கொஞ்சம் லைப் ஸ்டைலை மாற்றினாலே சரியாகிவிடும். 20 நானோ கிராமுக்கும் குறைவாக இருநதால்தான் குறைபாடு என்பது மருத்துவர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.


அதிக உடல் சோர்வு, மிகவும் பலவீனமாக இருப்பது, உடல் வலி இதெல்லாம் வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள். இதை சரி செய்யாவிட்டால் சர்க்கரை நோய், எலும்புகள் வலுவிழப்பு, எலும்பு நோய்கள், தசைவலி, சுவாச தொற்று பிரச்னைகள், எலும்பு முறிவு போன்றவை ஏற்படலாம் என்று எச்சரிக்கை செய்கின்றனர் மருத்துவர்கள்.


ALSO READ | நம் சித்தர்கள் தந்த அற்புத யுக்தி..... கொரோனாவை துரத்தும் ஆற்றல் மிக்க சக்தி...!!!


உணவு மூலம் குறைந்த அளவுதான் வைட்டமின் டி கிடைக்கும். அதனால் மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். உங்களை ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்து, வைட்டமின் டி அளவு குறைபாட்டுக்கு ஏற்ப மருந்து தருவார்கள்.


காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை வெயில் கொளுத்தும்போது 20 நிமிடம் முதல் அரை மணி  நேரம் வெயிலில் நிற்கலாம். பால்கனி, ஜன்னலோரம் நின்று சும்மா தலைகாட்டுவதெல்லாம் போதாது. கை, கால், முகம் மட்டும் வெளியில் பட்டால் மிக குறைவாகத்தான் இந்த சத்தை கிரகிக்கும். சுமார் 70 சதவீத இந்தியர்களுக்கு இந்த குறைபாடு இருக்கு என ஒரு ஆய்வு சொல்கிறது. அந்த லிஸ்டுல உங்க பேரு இல்லாம பார்த்துக்குங்க. அவ்ளோதான்.