வெந்தயம், மிகவும் பிரபலமான மூலிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பல வருடங்களாக ஒவ்வொரு வீட்டிலும் மிக முக்கிய உணவுப்பொருளாக இருப்பது வெந்தயம். நமது மூதாதையர்கள் முதல் இன்று வரை நாம் இதை பல விதங்களில் பல உணவுகளில் பயன்படுத்தி வருகிறோம். பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட வெந்தயம் ஏராளமான நோய்களைக் குணப்படுத்த பயனுள்ளதாக இருக்கிறது. வெந்தயம், ஆண்களுக்கு பயனளிக்கும் சில தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், அதன் நன்மைகள் பற்றி பலருக்கு எந்தவித யோசனையுமில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி வெந்தயம், ஆண்களுக்கு உண்டாகும் பல்வேறு வகையான பாலியல் பிரச்சினைகளை தீர்க்கிறது மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கிறது. மேலும் ஆண்களின் பாலியல் பலவீனத்தை அகற்றுவதில் வெந்தயம் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இன்றையக் கட்டுரையில், ஆண்களுக்கு பயனளிக்கும் வெந்தயத்தின் நன்மைகள் பற்றியத் தகவல்களைத் தெரிந்து கொள்வோம். 


மேலும் படிக்க | இஞ்சியை தோல் நீக்கி பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா; இந்த செய்தி உங்களுக்குத் தான்


டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவும்
டெஸ்டோஸ்டிரோனின் சுரப்பை அதிகரிக்கும் நொதிகள் வெந்தயத்தில் நிறைந்துள்ளது. ஆண்களின் உடல் வலிமையை அதிகரிக்க வெந்தயம் பயனுள்ளதாக இருக்கிறது. வெந்தயத்தைத் தவறாமல் உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவும். 


இரத்த சர்க்கரை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள் வெந்தய விதையை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். எனவே நீங்கள் அதை உட்கொள்ள வேண்டும்.


தசைகளும் வலுவாக இருக்கும்
வெந்தய விதைகளால் தசைகளும் வலுவடையும். வெந்தயச் சாற்றைப் பயன்படுத்துவது, ஆண்களின் பாலியல் ஆசையைத் தூண்டுகிறது மற்றும் பாலியல் சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது.


ஆற்றலை அதிகரிக்கவும் உதவும்
வெந்தய விதைகளை சாப்பிடுவது உங்கள் உடலில் ஆற்றலை அதிகரிக்கும். அதாவது, யாருடைய ஆற்றல் குறைந்து கொண்டே செல்கிறதோ, அவர்கள் அதை எந்த வகையிலும் உட்கொள்ள வேண்டும். இது உங்கள் ஆற்றலைக் குறைக்காது.


லிபிடோவை அதிகரிப்பதில் உதவும்
ஆண்களின் பாலியல் ஆசையையும், லிபிடோவை அதிகரிப்பதிலும் வெந்தயம் மிகவும் நன்மை பயக்கிறது. வெந்தயச் சாற்றைப் பயன்படுத்துவது, ஆண்களின் பாலியல் ஆசையைத் தூண்டுகிறது மற்றும் பாலியல் சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது.


இருதயத்தின் எரிச்சல் உணர்வைக் குறைக்கும்
பெரும்பாலான ஆண்கள் வயிறு எரிச்சல் மற்றும் இரைப்பை பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சினைகளுக்கான முக்கிய காரணம் அஜீரணமாகும். வயிற்று வாயுவுக்கு சிகிச்சையளிக்க வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது என சில ஆய்வுகள் கூறுகின்றன. வெந்தய விதைகள் மார்பில் எரிச்சல் உணர்வு, அஜீரணம் மற்றும் இரைப்பை பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளை நீக்குகிறது. இதயத்தில் உண்டாகும் எரிச்சல் உணர்வு பிரச்சினைக்கு சிகிச்சையளிக்க வெந்தயம் பயனுள்ளதாக அமைகிறது.


வெந்தய விதையில் இந்த பண்புகள் உள்ளன
வெந்தய விதைகளை உட்கொள்வது ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை மேம்படுத்தும். வெந்தய விதைகளில் ஃபுரோஸ்டானோலிக் சபோனியன் உறுப்பு உள்ளது, இது ஆரோக்கியமான டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவுகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ தமிழ் நியூஸ் இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR