Fertility And Diet: ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் பொது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆரோக்கியம் மற்றும் நாள்பட்ட நோயின் அபாயம் பற்றிய உணவு முறைகள் பற்றிய ஆய்வுகள் அதிக அளவில் இருந்தாலும், கருவுறுதல் பற்றிய ஆய்வுகள் குறைவாகவே உள்ளன. ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு என்ன சாப்பிட வேண்டும் என்பதற்கான ஆரோக்கிய குறிப்புகள் பல பட்டியலிடப்பட்டாலும், ஒரு பெண் கர்ப்பம் தரிக்க என்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும்? என்பது பெரிய அளவில் விவாதிக்கப்படுவதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சண்டிகரில் உள்ள கிளவுட்நைன் குழும மருத்துவமனைகளின் கருவுறுதல் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் காஞ்சி குரானா கருத்துப்படி, சில உணவுகள் கருவுறுதல் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு உதவும்.


மேலும் படிக்க | Food For Heart: மாரடைப்பை தடுக்கும் 'மஞ்சள்' நிற உணவுகள்


மக்ரோநியூட்ரியண்ட்ஸ்: டயட் கலவை முக்கியமா?
மலட்டுத்தன்மையுள்ள தம்பதிகளில் எடை குறைப்பதன் நன்மைகள் நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளன. கருவுறுதல் தொடர்பான பிரச்சினைகள் உள்ள தம்பதிகளுக்கான உணவு வழிகாட்டுதல்களில், கொழுப்பு குறைவான உணவுகள், கொட்டைகள், ஆலிவ் எண்ணெய் முக்கியமானவைகளாக இருக்கின்றன.


தினசரி உணவில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் கால் பங்காக இருக்க வேண்டும். உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், இனிப்பு சோளம், பாஸ்தா, நூடுல்ஸ் மற்றும் அரிசி போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.



புரதம் நிறைந்த உணவுகள், தினசரி உணவின் 25% இருக்க வேண்டும். குறைந்த அளவிலான சிவப்பு இறைச்சி, கோழி  முட்டை, டோஃபு மற்றும் பருப்பு வகைகள் ஆகியவை எடுத்துக் கொள்ளலாம். பச்சை காய்கறிகள், கேரட், பச்சை பீன்ஸ், பட்டாணி, ப்ரோக்கோலி மற்றும் பல்வேறு நிறங்களைக் கொண்ட காய்கறிகளை உண்ணவும்.


நுண்ணூட்டச்சத்துகள் நுகர்வு


கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய காலகட்டங்களில் அதிக உடலுழைப்பு இல்லை என்பதும், வேலைகள் உட்கார்ந்தே பார்ப்பது அதிகமாகவே இருப்பதால், ஆற்றல்  செலவழிவது குறைவாகவே  உள்ளது. எனவே, கர்ப்பத்திற்கு முன்னும் பின்னும் நுண்ணூட்டச் சத்துக்கள் தேவை.


அயோடின், ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்பு போன்ற சில நுண்ணூட்டச்சத்துக்கள் முக்கியமானவை, ஏனெனில் அவை கரு முட்டைகள் மற்றும் விந்தணுக்களின் வளர்ச்சிக்கு முக்கியமானவை.


மேலும் படிக்க | Fibromyalgia: உடல் வலியை அலட்சியம் செய்ய வேண்டாம்; தசைநார் வலி நோய் காரணமாக இருக்கலாம்


அதேபோல், ஆண்களின் விந்தணுவின் தரத்துக்கும், கருவடைய செய்யும் பண்புக்கும் இரும்புச் சத்து மிகவும் அவசியமானது. இருப்பினும், உகந்த கருவுறுதலுக்கான ஊட்டச்சத்து அறிவியல் இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளது,


தண்ணீர் தொழில்நுட்ப ரீதியாக பார்க்கப்போனால் ஒரு உணவு அல்ல, ஆனால் கரு முட்டை ஆரோக்கியத்திற்கு தண்ணீர் ஒரு மிக முக்கியமான மூலப்பொருள் ஆகும். பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள ரசாயனங்கள், கரு முட்டைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் வைத்து அருந்துவதை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் படுக்கைக்கு அருகில் அல்லது வேலை செய்யும் மேஜையில் ஒரு சொம்பு தண்ணீரை வைத்திருப்பதை மறாக்காதீர்கள்...


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ