வாழைப்பழத்தின் இந்த நன்மைகளை பற்றி தெரிந்தால் இதை சாப்பிடாமல் இருக்க முடியாது

Benefits of Banana: அதிசயவைக்கும் நன்மைகள் வாழைப்பழத்தில் உள்ளன. பல வித ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் வாழைப்பழமும் ஒன்றாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 2, 2022, 11:32 AM IST
  • செரிசர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
  • செமான அமைப்பு வலுவாக இருக்கும்.
  • கால்சியம் சத்து அதிகம் கிடைக்கும்.
வாழைப்பழத்தின் இந்த நன்மைகளை பற்றி தெரிந்தால் இதை சாப்பிடாமல் இருக்க முடியாது title=

வாழைப்பழத்தின் பலன்கள்: பல வித ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் வாழைப்பழமும் ஒன்றாகும். இதன் மூலம் உங்கள் உடலுக்கு கால்சியம் சத்து அதிகம் கிடைக்கிறது. இந்த பழத்தில் ஒன்றல்ல இரண்டல்ல பல பெரிய நன்மைகள் உள்ளன.

வாழைப்பழத்தை நம் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால், பல அற்புத பலன்கள் கிடைக்கும். இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தவும் வாழைப்பழம் பெரிதும் உதவுகிறது. இப்பழத்தின் மற்ற நன்மைகள் என்னவென்று காணலாம். 

1. எடை கட்டுப்படும்

எடையைக் கட்டுப்படுத்த வாழைப்பழம் பெரிதும் உதவுகிறது. உடல் எடையை கட்டுப்படுத்த விரும்புபவர்கள் இந்த பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எனினும், இந்த பழத்தை தவறாமல் சரியான முறையில் சாப்பிட வேண்டும். அப்போதுதான் நல்ல பலன் கிடைக்கும்.

2. செரிமான அமைப்பு வலுவாக இருக்கும்

எப்பொழுதும் வயிற்றெரிச்சல் உள்ளவர்கள் வாழைப்பழத்தை கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதை சாப்பிடுவதால் செரிமான மண்டலம் பலப்படும். இதன் காரணமாக, வாயுத்தொல்லை படிப்படியாக முடிவுக்கு வரும்.

மேலும் படிக்க | உடலில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தணுமா: இந்த 4 பழங்கள் உதவும்

3. சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்

சிலர் வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று எண்ணி சாப்பிடுவதில்லை. ஆனால், இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். அதுமட்டுமின்றி இதனை உட்கொள்வதன் மூலம் உங்கள் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். அதாவது இதய நோயாளிகளும் இப்பழத்தை உட்கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் நிச்சயம் பலன் அடைவீர்கள்.

4. கால்சியம் சத்து அதிகம் கிடைக்கும்

உடலில் கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள் வாழைப்பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அதன் பலன் பரிபூரணமாகத் தெரியும். ஆகையால் உடலில் கால்சியம் அளவை அதிகரிக்க கண்டிப்பாக வாழைப்பழத்தை உட்கொள்ளலாம். 

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்

வாழைப்பழத்தில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி மற்றும் மெக்னீசியம் தவிர, வைட்டமின்-சி, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்-பி6, தயாமின், ரிபோஃப்ளேவின் ஆகியவை உள்ளன. வாழைப்பழத்தில் 64.3 சதவீதம் தண்ணீர், 1.3 சதவீதம் புரதம், 24.7 சதவீதம் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை நம் உடலுக்கு மிகவும் அவசியம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வெங்காயம், பூண்டு தோலில் இருக்கு எக்கச்சக்க நன்மைகள்: தூக்கி எறிஞ்சிடாதீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News