Food For Heart: மாரடைப்பை தடுக்கும் 'மஞ்சள்' நிற உணவுகள்

Heart Health and Yellow Foods: மாரடைப்பு வராமல் இருக்க தடுக்க, சில மஞ்சள் நிற உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் பலனளிக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 16, 2022, 09:40 PM IST
  • சில மஞ்சள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
  • மாம்பழத்தின் பெயரைக் கேட்டாலே வாயில் உமிழ் நீர் சுரக்கும்.
  • இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
Food For Heart: மாரடைப்பை தடுக்கும் 'மஞ்சள்' நிற உணவுகள்  title=

Food For Heart: இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே இதய நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. முதியவர்களுக்கு மாரடைப்பு வந்த காலம் போய், இளைஞர்களும் மாரடைப்பினால் இறக்கும் சமப்வங்கள் அதிகரித்து வருகிறது.  இதனால், நம் அன்றாட பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டு, பொரித்த உணவுகளை தவிர்ப்பதோடு,  ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பது மிகவும் புத்திசாலித்தனம்.

இதயத்திற்கு இதமான மஞ்சள் உணவுகள்

இதயம் நம் உடலின் மிக முக்கியமான பகுதியாகும் என்பது சொல்ல்லொத் தெரிவதல்ல. இதய ஆரோக்கியத்தில் கவனம்  செலுத்தவில்லை என்றால், மாரடைப்பு , கரோனரி தமனி நோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், நம் அன்றாட உணவில் இருந்து எண்ணெய் உணவுகளை விலக்கி வைத்து, ஆரோக்கியமானவற்றை மட்டுமே சாப்பிடுவது முக்கியம். கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மிகவும் பிரபலமான உணவியல் நிபுணரான டாக்டர் ஆயுஷி யாதவ் இது குறித்து கூறுகையில், சில மஞ்சள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்கிறார்.

மாரடைப்பு வராமல் தடுக்கும்  மஞ்சள் நிற உணவுகள் 

1. மாம்பழம்

மாம்பழத்தின் பெயரைக் கேட்டாலே வாயில் உமிழ் நீர் சுரக்கும். மாம்பழத்தை சுவைக்க, கோடைக் காலத்திற்காக் காத்திருக்கிறோம். இனிப்பான, சுவையான இந்தப் பழத்தை ருசித்தால், இதய ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதை அறிந்து கொண்டால், உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

மேலும் படிக்க | Fibromyalgia: உடல் வலியை அலட்சியம் செய்ய வேண்டாம்; தசைநார் வலி நோய் காரணமாக இருக்கலாம்

2. எலுமிச்சை

எலுமிச்சை மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு. சாலட் முதல் எலுமிச்சைப் பழம் உணவுகளில் பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது, இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

3. வாழைப்பழம்

வாழைப்பழம் மிகவும் எளிமையான, விலை குறைந்த பழம். ஆனால், இதில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய நலன்களோ விலை மதிப்பில்லாதவை.  எனவே தினமும் இந்த பழம் உங்கள் உணவில் இருக்கட்டும்.  வாழைப்பழங்களை சாப்பிடுவது எடையைக் குறைக்க உதவுகிறது மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்

4. அன்னாசி

அன்னாசிப்பழம் அவ்வளவு இனிப்பாக இல்லாமல் சிறிது புளிப்பாக இருப்பதால், சிலருக்கு அது பிடிப்பதில்லை. ஆனால் இதை சாப்பிட்டால் மாரடைப்பு அபாயம் பெருமளவு குறைகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இருப்பினும், இதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.  ஏனெனில் இதனால்,  இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.

5. பெல் பெப்பர்

பெல் பெப்பர் எனப்படும் மஞ்சள் நிறை குடைமிளகாயில் ஏராளமான நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் உள்ளது. இதனால் உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்கிறது. உடலில் இரத்தம் பற்றாக்குறை ஏற்படாது. இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News