Corona: இந்த நாட்டில் சுனாமியை விட ஆபத்தான கொரோனாவின் ஐந்தாவது அலை!
சுனாமியை விட ஆபத்தானது என்று கூறப்படும் கொரோனாவின் ஐந்தாவது அலை ஏற்பட்டுள்ளதால் இந்த நாட்டில் சுகாதார பேரிடர் ஏற்பட்டுள்ளது
கொரோனா உருவானது முதல் பல்வேறு விதமான பாதிப்புகளை இந்த் பூவுலகம் முழுவதுமே ஏற்படுத்தி வருகிறது. மிகவும் குறுகிய காலத்தில், உலகையே முடக்கிப்போட்ட கொரோனாவின் மூன்றாம் அலையைப் பற்றி இந்தியாவில் பேசிக் கொண்டிருக்கிறோம். சுனாமியை விட ஆபத்தானது என்று கூறப்படும் கொரோனாவின் ஐந்தாவது அலை ஏற்பட்டுள்ளதால் இந்த நாட்டில் சுகாதார பேரிடர் ஏற்பட்டுள்ளது.
ஆனால், பிரான்சில் கொரோனாவின் ஐந்தாவது அலையால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. சமீபத்தில், பிரான்சின் சுகாதார அமைச்சரும் கொரோனாவின் நெறிமுறையைப் பின்பற்றுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
கொரோனாவின் வேகத்தை கட்டுப்படுத்த பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. ஆனால் தொற்றுநோய் அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
சமீபத்தில், கொரோனா வைரஸின் ஐந்தாவது அலை பற்றிய செய்தி பிரான்சில் இருந்து வருகிறது. பிரான்ஸ் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கொரோனா தொற்றுநோயின் ஐந்தாவது அலை தொடங்கியது என்றும், பிரான்சின் அண்டை நாட்டிலும் ஐந்தாவது அலை வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
READ ALSO | கோவிட் தொற்றுநோயால் இன்னும் 1 லட்சம் பேர் இறப்பார்கள்: எச்சரிக்கும் நிபுணர்கள்
பிரெஞ்சு சுகாதார அமைச்சர் Olivier Veran கருத்துப்படி, ஐந்தாவது அலை முன்னெப்போதையும் விட மிகவும் ஆபத்தானது. ஐந்தாவது அலையைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி, கொரோனா நெறிமுறையைத் தொடர்ந்து பின்பற்றுவதுதான் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து பிரான்சில் கொரோனா தொற்று வேகம் அதிகரித்து வருகிறது. தடுப்பூசிகள், முகக்கவசம், மற்றும் சுகாதார நடவடிக்கைகள் மூலம், நாடு ஐந்தாவது அலையை வலுவாக எதிர்கொள்ள முடியும் என்று அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக பிரான்சில் இதுவரை 73.46 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.19 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியா உட்பட ஒவ்வொரு நாட்டிலும், முதல் அலையை விட இரண்டாவது அலை கொரோனா மிகவும் ஆபத்தானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகள் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டன.
பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் கொரோனா அதிக அழிவை ஏற்படுத்தியது. இது மட்டுமின்றி, அமெரிக்காவில் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் வந்த இரண்டாவது கரோனா அலை லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா வைரஸின் ஐந்தாம் அலையின் பாதிப்புகளை பற்றி நினைத்தாலே அச்சமாக இருக்கிறது.
ALSO READ | தூங்கும் போதே உடல் எடையை குறைக்கும் வழி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR