மாவுகளில் சிறந்தது மல்டிகிரைனா இல்லை கம்பா? போட்டியில் இருந்து விலகும் தானியங்கள்
Flour For Health: கோதுமை மாவில் செய்யப்படும் உணவுகள் மெதுவாகத்தான் ஜீரணமாகும் என்பதால், வேறு வகை மாவுகளையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்
நீங்கள் எளிதாக உடல் எடையை குறைக்க விரும்பினால், மைதா, கோதுமை போன்ற மாவுகளை தவிர்த்து, வேறு சில மாவுகளை உணவில் சேர்த்துக் கொண்டால், ஆரோக்கியமும் மேம்படும், உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். கோதுமை மாவில் செய்யப்படும் உணவுகள் மெதுவாகத்தான் ஜீரணமாகும் என்பதால், வேறு வகை மாவுகளையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். கம்பு, தினை, ராகி, சோளம் என பல தானியங்களில் இருந்து மாவு தயாரித்து பயன்படுத்தலாம்.
சோள மாவு: நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், தைமின், ரிபோஃப்ளோவின், நியாசின், பொட்டாசியம், மெக்னீஷியம், சோடியம், தாமிரம், மங்கனீஸ், துத்தநாகம் ஆகியவை அதிகமாக உள்ளது சோள மாவும். உடலுக்கு அதிக சக்தியைக் கொடுக்கும் சோள மாவு, சூப், க்ரீம் மற்றும் சாஸ் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. கஞ்சி வைத்து குடிக்கவும், சோளத்தை பயன்படுத்துகிறார்கள்.
சோள மாவில் கால்சியம், இரும்பு, அமினோ அமிலங்கள், பீட்டா கரோட்டின் மிகக் குறைந்த அளவே இருக்கின்றன. மாவுச் சத்தை மாற்றி, சர்க்கரையின் அளவைக் கூட்டக்கூடிய தன்மை இதற்கு இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் சோள மாவை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
மேலும் படிக்க | Curry Leaves: தேங்காயுடன் கூட்டு சேர்ந்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கறிவேப்பிலை
தினை மாவு: சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் போன்றோர் தினை மாவைக் கஞ்சியாகக் குடிக்காமல் ரொட்டி செய்து சாப்பிடலாம். உருண்டையாகப் பிடித்துச் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நேரடியாகச் சத்துக்கள் கிடைக்கின்றன.
தினை மாவு மிகவும் சத்து வாய்ந்தது. கார்போஹைட்ரேட் அதிக அளவு கொண்ட தினையில் புரதம், பாஸ்பரஸ், தைமின், ரிபோஃப்ளோவின், பொட்டாசியம், துத்தநாகம் ஆகியவை இருக்கின்றன. எண்ணெய்ச் சத்துக்கள், கால்சியம், இரும்பு, ஃபோலிக் அமிலம், குரோமியம், மெக்னீஷியம், மாங்கனீஸ் ஆகியவை குறைந்த அளவே இருக்கின்றன. சிறுநீரக நோயாளிகளும் தினையை எடுத்துக் கொள்ளலாம்.
கம்பு மாவு: புரதம், தைமின், ரிபோஃப்ளோவின், நியாசின் ஆகியவற்றை கொண்ட கம்பு, கால்சியம், பீட்டா கரோட்டின், குரோமியம் ஆகியவற்றையும் குறைவான அளவில் கொண்டுள்ளது. மால்டோஸ், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், மங்கனீஸ், துத்தநாகம், தாமிரம், நார்ச் சத்து ஆகியவை அதிகமாக இருக்கின்றன. ரத்தசோகை உள்ளவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் கம்பை உண்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
முளைக்கட்டிய கம்பை வறுத்துப் பொடிக்கும்போது, வாசனையும் ருசியும் அதிகரிப்பதோடு எளிதில் ஜீரணமும் ஆகும். எனவே, மலச்சிக்கல் பிரச்னை வராது. கம்பை, கஞ்சி, அடை மற்றும் தோசை செய்து சாப்பிடலாம்.
மேலும் படிக்க | COPD: நுரையீரல் நோய்க்கு அருமருந்தாகும் பீட்ருட் ஜூஸ்!
மல்டிகிரைன் மாவு: நார்ச்சத்து மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பல்வேறு தானியங்களைக் கலந்து தயாரிக்கப்படும் மல்டிகிரைன் மாவு, தானியங்களைச் சேர்த்துக்கொள்வதற்கு நல்ல வழியாகும். மல்டிகிரைன் மாவில் உள்ள தானியங்களின் கலவையானது நீடித்த ஆற்றலை அளிக்கும்.
மல்டிகிரைன் மாவு சுத்திகரிக்கப்பட்ட மாவுகளை விட குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, அதாவது இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் மற்றும் வகை 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
மல்டிகிரைன் மாவைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
மேலும் படிக்க | Dhaniya Water: பல நோய்களை ஓட ஓட விரட்டும் தனியாவின் அற்புத மூலிகை ஜூஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ