Curry Leaves: தேங்காயுடன் கூட்டு சேர்ந்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கறிவேப்பிலை

Curry Leaves For Hair: கறிவேப்பிலை பல்வேறு முடி பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வை வழங்குகிறது. கறிவேப்பிலை எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புதமான மருந்து

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 21, 2023, 09:11 PM IST
  • கறிவேப்பிலையின் மருத்துவ மந்திரம்
  • ஊட்டச்சத்துக்களின் புதையல் கறிவேப்பிலை
  • அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் உதவும் மூலிகை
Curry Leaves: தேங்காயுடன் கூட்டு சேர்ந்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கறிவேப்பிலை title=

கறிவேப்பிலை இந்திய உணவுகளில் பிரபலமான மற்றும் சுவையான மூலப்பொருளாகும், தலைமுடிக்கு ஏராளமான நன்மைகளை செய்யும் கறிவேப்பிலையின் மகத்துவம் பலருக்கு தெரிந்தாலும் நேரமின்மை என்ற சோம்பல் காரணத்தை சொல்லிவிட்டு, விலை அதிகம் கொடுத்து ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், கறிவேப்பிலை எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இருந்து முடியை வலுப்படுத்துதல் மற்றும் கண்டிஷனிங் செய்வது வரை, கறிவேப்பிலை பல்வேறு முடி பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வை வழங்குகிறது. வறண்ட, சேதமடைந்த அல்லது மெலிந்த முடி இருந்தாலும், கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு ஊட்டமளிக்கும்.  

கறிவேப்பிலையின் ஊட்டச்சத்துக்கள்
நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ள கறிவேப்பிலையில், அமினோ அமிலங்கள் உள்ளன. இவை நமது முடிக் கால்களை வலுவாக்குகிறது. புரதம் மற்றும் பீட்டா கரோட்டீன்கள் உள்ளதால் கூந்தல் உதிர்வது குறைகிறது. இரும்புச் சத்து, கால்சியம், விட்டமின் சி மற்றும் பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து போன்றவை உள்ளன. 

மேலும் படிக்க | சிறுநீரகக் கல் பிரச்சனை இருக்கா? இந்த பழங்களுக்கு நோ சொல்லிடுங்க

கறிவேப்பிலை எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்
ஒரு கைப்பிடி கறிவேப்பிலை

1 கிண்ணம் தேங்காய் எண்ணெய்

ஒரு தேக்கரண்டி வெந்தயம்

செய்முறை

கடாயில் தேவைக்கேற்ப தேங்காய் எண்ணெயை எடுக்கவும். எண்ணெயை லேசாக சூடாக்கவும். இப்போது இந்த எண்ணெயில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும். அதனுடன் வெந்தயத்தையும் சேர்க்கவும், எண்ணெயின் நிறம் கருப்பு நிறமாக மாறும் வரை இந்த எண்ணெயை சூடுபடுத்தவும். பிறகு, அடுப்பை அணைத்து, எண்ணெயை குளிர்விக்கவும். ஆறியதும் வடிகட்டி பாட்டிலில் சேமித்து வைக்கவும்.

கறிவேப்பிலை எண்ணெயை பயன்படுத்தும் முறை
தலை முடியை வளமானதாகவும் செழிப்பாகவும் மாற்ற, கறிவேப்பிலை எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் முடியை சிக்கில்லாமல் சீவவும். இப்போது இந்த எண்ணெயை வேர்களில் இருந்து முடியின் நீளம் வரை தடவவும். இரவில் தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் அல்லது தலைமுடியை அலசுவதற்கு எண்ணெயை தலையில் மசாஜ் செய்யுங்கள்.

மேலும் படிக்க | COPD: நுரையீரல் நோய்க்கு அருமருந்தாகும் பீட்ருட் ஜூஸ்!

குளிக்கும்போது, வெந்நீரில், ரசாயனம் அதிகம் இல்லாத லேசான ஷாம்பூவின் உதவியுடன் தலைமுடியைக் கழுவவும். இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உங்கள் தலைமுடிக்கு தடவினால், உங்கள் தலைமுடி விரைவில் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்..

கூந்தலுக்கு கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெயின் நன்மைகள் 
தேங்காய் எண்ணெய் முடிக்கு ஊட்டச்சத்து மற்றும் ஈரப்பதத்தை அளிக்கிறது. இதில் உள்ள பண்புகள் முடியை வலுப்படுத்தி, உதிர்வதைத் தடுக்கும். கறிவேப்பிலையில் வைட்டமின்-பி, வைட்டமின்-சி, புரதம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன, இவை முடிக்கு மிகவும் நன்மை பயக்கும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை இரண்டையும் கலந்து தடவினால் முடி வளரும். மேலும், இது இளநரை, முடி நரைத்தல், முடி உதிர்தல் மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கொடுக்கிறது. தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலையை தடவினால் கூந்தல் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். 

கறிவேப்பிலை எண்ணெயின் மகத்துவம்
இந்த எண்ணெயில் லினாலூல், எலிமால், ஜெரனைல் அசிடேட், மைர்சீன், ஆல்ஃபா டெர்பினீன் மற்றும் பீட்டா ஓசிமீன் ஆகியவை உள்ளன
நாம் சமையலில் அதிகமாக பயன்படுத்தும் ஒரு பொருள் என்றால் அது கறிவேப்பிலை தான்.  

மேலும் படிக்க | Dhaniya Water: பல நோய்களை ஓட ஓட விரட்டும் தனியாவின் அற்புத மூலிகை ஜூஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News