Weight Loss Tips: ஆரோக்கியத்திற்கான கேடு, உங்கள் உடல் எடையை அதிகரிப்பதன் மூலம் தொடங்குகிறது. உங்கள் உடல் எடை அதிகரித்தால், உங்கள் வாழ்க்கை முறை மோசமாகிவிட்டது என்று அர்த்தம். இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதயம் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவை உடல் பருமனுடன் தொடர்புடையவை. உங்கள் உடல் பருமனுக்கான முக்கிய காரணம் சில மோசமான பழக்கவழக்கங்களாகும்.  இதன் காரணமாக உங்கள் உடலின் செயல்பாட்டை பாதிக்கும் உடல்  பருமனுக்கான சில கெட்ட பழக்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்வரும் பழக்கவழக்கங்களில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை உங்களிடம் இருந்தால், அவற்றை உடனடியாக மாற்றிக் கொள்ளவும். இல்லையெனில் உங்கள் உடல்நிலை பாதிக்கப்படலாம். 


தூக்கமின்மை


NCBI மற்றும் Harvard  நடத்திய பல ஆராய்ச்சிகளில் போதுமான தூக்கம் இல்லாதது உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. தூக்கமின்மை காரணமாக, உடலில் குளுக்கோஸ் உணர்திறன் மற்றும் இன்சுலின் உணர்திறன் குறைந்து கார்டிசோல், கிரெலின், லெப்டின், பசி போன்றவை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.


ALSO READ | Benefits of Guava: கொய்யா பழத்தில் புதைந்து கிடக்கும் கோடி நன்மைகள்


குறைவான உடல் இயக்கம்


உடல் பருமனுக்கும் கலோரி உட்கொள்ளலுக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது. உங்கள் உணவில் அதிக கலோரிகள் இருந்தால், அவற்றை எரிக்க போதுமான அளவிற்கு உங்கள் உடல் செயல்பாடு இல்லை என்றால், உங்கள் உடல் பருமன் அதிகரிக்கும். தேவையானதை விட அதிக கலோரிகளை உட்கொள்வதன் மூலம், கொழுப்பு உடலில் சேரத் தொடங்கி,  உடல் பருமன் அதிகரிக்கும். இதனுடன், குறைவான உடல் செயல்பாடு காரணமாக கழுத்து வலி மூட்டுவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.


இரவு உணவு தாமதமாகுதல்


தாமதமாக இரவு உணவு சாப்பிட்டு, உடனேயே தூங்க செல்பவர்களுக்கு, உடல் பருமன் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். ஏனெனில், தூக்கத்தில் செரிமான சக்தி மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், நம் வயிற்றில் உள்ள உணவு,  சரியாக செரிமானம் ஆகாமல், அதன் காரணமாக வாயு, அஜீரணம், வயிற்று வலி, மலச்சிக்கல் ஆகியவற்றுடன் உடல் பருமன் பிரச்சினையும் அதிகரிக்கிறது.


ALSO READ | Brain Foods: ஞாபக சக்தி அதிகரிக்க இந்த ‘5’ உணவுகள் அவசியம்


ஆரோக்கியமற்ற காலை உணவு அல்லது காலை உணவைத் தவிர்ப்பது


காலை உணவின் முக்கியத்துவம் பலருக்கு புரிவதில்லை. அதேசமயம் உங்கள் ஆரோக்கியத்திற்கு காலை உணவு மிகவும் முக்கியமானது. நீங்கள் காலை உணவைத் தவிர்த்துவிட்டால் அல்லது காலையில் மிகவும் குறைவான உணவை எடுத்துக் கொள்வதால், பகலில் அவ்வப்போது பசி ஏற்படும். அதனால், எதையாவது சாப்பிட வேண்டும் என்ற உந்துதல் காரணமாக, எண்ணெய் பண்டங்களை கொரித்தல் போன்ற ஆரோக்கியமற்ற உணவு உண்ணும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால், அதிக கலோரி உணவுகளை உட்கொள்ளும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இதன் காரணமாக உடல் பருமன் அதிகரிக்கிறது. 


ஆரோக்கியத்திற்கான நல்ல பழக்கங்கள் எவை? 


- தினமும் 8 முதல் 9 மணி நேரம் போதுமான தூக்கம்.


- தினமும் அரை மணி நேரம் உடல் பயிற்சி செய்யுங்கள். குறைந்தபட்சம் நடைபயிற்சி போன்றவற்றை செய்யுங்கள்.


- ஒவ்வொரு நாளும் தூங்குவதற்கு 2 முதல் 3 மணி நேரம் முன்பாக இரவு உணவு சாப்பிடுங்கள்.


- பழங்கள், பழச்சாறுகள், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை காலை உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.


ALSO READ | குழந்தையின் மூளை ஜெட் வேகத்தில் இயங்க வேண்டுமா; இந்த ‘6’ உணவுகளை கொடுக்கவும்


இங்கே வழங்கப்பட்ட தகவல்கள் எந்தவொரு மருத்துவ சிகிச்சைக்கும் மாற்றானது இல்லை. இது பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.


ALSO READ | பரோட்டா பிரியர்களுக்கு ஒரு பகீர் தகவல்! மைதா எலும்புகளை பலவீனமாக்கும்; எச்சரிக்கை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR