Health Benefits of Guava: கொய்யா பழம் ஆற்றல்களை வாரி வழங்கும் பழம் என்றால் மிகை அல்ல. இதில், உடலுக்கு மிகவும் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. கொய்யா பழத்தின் நன்மைகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சாப்பிட சுவையாக இருக்கும் இந்த கொய்யா பழத்தின் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து கொண்டால், உங்கள் மனம் வியப்படையும். இது குறைவான கலோரிகளுடன், நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ள பழம் என்பதால், எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. இதில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால், நீரிழிவு (Diabetes) நோயாளிகளுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.
உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் இது குறித்து கூறுகையில், கொய்யா பழத்தில் உடலை குளிர்விக்கும் ஆற்றல் உள்ளது என்பதால் பல வயிற்று நோய்களைக் குணப்படுத்த தீர்வாக உள்ளது. கொய்யா மலச்சிக்கலின் சிக்கலை நீக்குகிறது. அதன் விதைகளை உட்கொள்வதும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கொய்யாவில் போதுமான அளவு வைட்டமின் சி உள்ளது என்கிறார். பல நன்மைகள் நிறைந்த கொய்யாவில், முக்கியமான 5 நன்மைகளை டாக்டர் ரஞ்சனா சிங் பட்டியலிட்டுள்ளார்.
ALSO READ | Brain Foods: ஞாபக சக்தி அதிகரிக்க இந்த ‘5’ உணவுகள் அவசியம்
1. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்
கொய்யாவில் வைட்டமின் சி உள்ளதால் நோய்களை எதிர்த்துப் போராடும் உடலின் திறனை பலப்படுத்துகிறது. கொய்யாவில் ஆரஞ்சை விட நான்கு மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது. இது இருமல், சளி போன்ற சிறு தொற்று நோய்களைத் தடுக்கிறது என்பதோடு, கொரோனா காலத்தில், தொற்றிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள இதனை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. முதுமையை எதிர்க்கும் பண்புகள் நிறைந்த கொய்யா
முதுமையை எதிர்க்கும் பண்புகள் நிறைந்த கொய்யா, சருமத்தின் சேதமடைந்த செல்களை புதுப்பித்து ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்கும். இதன் காரணமாக சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறையும். அதன் இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து, கண்களுக்கு அடியில் தடவினால், கண்களின் கீழ் உள்ள கருவளையங்கள் மற்றும் வீக்கம் நீங்கும்.
3. பற்களை பலப்படுத்தும்
கொய்யா பழம் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும் கொய்யா இலைகளை மென்று சாப்பிடுவது வாய் புண்களை அகற்றும். காயங்களை விரைவாக குணப்படுத்துவதில் கொய்யா சாறு சிறப்பாக செயல்படும்.
ALSO READ | குழந்தையின் மூளை ஜெட் வேகத்தில் இயங்க வேண்டுமா; இந்த ‘6’ உணவுகளை கொடுக்கவும்
4. வயிறு தொடர்பான கோளாறுகளுக்கு தீர்வு
நீங்கள் கொய்யா பழத்தை இந்துப்புடன் சாப்பிட்டால், செரிமான பிரச்சினைகள் நீக்குகிறது. வயிற்றில் புழுக்கள் இருந்தால், கொய்யா உட்கொள்வது நன்மை பயக்கும். மேலும், மலச்சிக்கல் மற்றும் பித்தம் தொடர்பான பிரச்சனைகளும் நீக்குகிறது.
5. மூல நோய் குணமாகும்
மூல நோய் சிகிச்சையில் கொய்யா தண்டுகள் மிகவும் நன்மை பயக்கும். கொய்யா செடி தண்டுகளை காய வைத்து பொடி செய்து கஷாயம் வைத்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். ஒரு மாதத்திற்கு ஒரு நாளைக்கு ஒரு முறை என தொடர்ந்து குடித்து வந்தால் குணமாகும்.
ALSO READ | பரோட்டா பிரியர்களுக்கு ஒரு பகீர் தகவல்! மைதா எலும்புகளை பலவீனமாக்கும்; எச்சரிக்கை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR