உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியமும் வளர்ச்சியும் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் எந்த வகையான உணவைக் கொடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை கொடுக்க எவ்வளவு முயற்சி செய்தாலும், அவர்கள் பல வகையான நொறுக்குத் தீனிகள் மற்றும் துரித உணவுகளை விரும்புகிறார்கள். ஆனால், நீங்கள் அவர்களை எவ்வளவு நேசித்தாலும், அவர்களின் பிடிவாதத்திற்கு அடிபணிய வேண்டாம். பெற்றோர்கள் குழந்தைகளின் பிடிவாதத்திற்கு அடிபணிந்து, உணவு மற்றும் பானத்தின் விஷயத்தில் செய்யும் சில தவறுகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும். நமது சிறு குழந்தைகளுக்கு நாம் உணவளிக்கக் கூடாதவற்றைத் தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எச்சரிக்கை! இந்த 5 உணவுகளை குழந்தைகளுக்கு ஒரு போதும் கொடுக்காதீர்கள் (Health Tips)!


1. குளிர் பானங்கள் (Cool Drinks)


குழந்தைகள் குளிர் பானங்களைப் பார்த்தவுடன் அதனை வாங்கிக் கொடுங்கள் என மிகவும் அடம் பிடிப்பார்கள். இதில் மிக அதிக அளவு சர்க்கரை இருப்பதால், உடல் எடை அதிகரிப்பு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, பல் சொத்தை மற்றும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் அதில் உள்ள சோடா மூளை வலர்ச்சியையும் எலும்பு வளர்ச்சியையும் மிகவும் பாதிக்கும்.


2. துரித உணவு (Fast Food)


உங்கள் குழந்தைகளுக்கு துரித உணவைக் கொடுப்பதை முற்றிலுமாக கட்டுப்படுத்துங்கள். இல்லை என்றால், அது குழந்தைகளின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். அதில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சோடியம் மற்றும் சர்க்கரை அதிக அளவில் இருப்பதால் அவற்றை உட்கொள்வதை முற்றிலுமாக நிறுத்துங்கள்.


3. பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் (Processed Foods)


சிப்ஸ், பிஸ்கட் மற்றும் பல வகையான தின்பண்டங்களின் சுவை குழந்தைகளை மிகவும் கவர்கிறது, ஆனால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு முற்றிலும் தீங்கான கொழுப்பு, சோடியம் மற்றும் செயற்கை பொருட்கள் அதிகம் இருப்பதால் இவற்றை உங்கள் குழந்தைகளுக்கு எட்டாதவாறு தள்ளி வைக்கவும். அவர்களின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கும்.


மேலும் படிக்க | சிறுநீரக கல் முதல் நீரிழிவு நோய் வரை: பிரிஞ்சி இலையின் அட்டகாசமான நன்மைகள்


4. வெள்ளை பிரெட் (White Bread)


குழந்தைகள் தினமும் காலை உணவாக மைதாவில் தயாரிக்கப்பட்ட வெள்ளை பிரெட் அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் சாண்ட்விச் விரும்புகிறார்கள். நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்க உப்பு சேர்க்கப்படுகிறது என்றாலும், அதிக சோடியம் உணவுகள் குழந்தைகளுக்கு நல்லதல்ல. அதற்கு பதிலாக முழு தானிய ரொட்டியை சாப்பிட கொடுங்கள். மைதாவில் சத்துக்கள் எதுவுமே இல்லை. அதில் உள்ளது  கார்போஹைட்ரேட் மட்டுமே


5. சாக்லேட்


சாக்லேட் அல்லது இனிப்பு மிட்டாய் குழந்தைகளின் பலவீனம், ஆனால் பெற்றோர்கள் இந்த பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், ஏனெனில் இது குழந்தைகளில் உடல் பருமனை அதிகரிக்கிறது மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. மேலும் இது பல் சிதைவுக்கும் காரணமாகும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கீல்வாதத்திற்கு நிவாரணம் அளிக்கும் டாப் 5 பழங்கள்: மூட்டு வலி தொல்லை இனி இல்லை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ