Mucus: சளியா இருமலா? கவலை வேண்டாம், இந்த பொருட்கள் இருக்கும்போது சளிக்கு சலிக்கலாமா?
Food for Mucus Health: சுவாசிக்கும்போது மூக்கு வழியாகச் செல்லும் வெளிப்புற துகள்கள் நுரையீரலை அடையாமல் பாதுகாக்கும் வேலையை சளி செய்கிறது
நமது சுவாச அமைப்பை பாதுகாக்க இயற்கையாய் உடலால் உருவாக்கப்படும் சளியே, நமக்கு ஒரு தொல்லையாக மாறினால் என்ன செய்வது? அதிகப்படியான சளி வெளியேற என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தெரிந்துக் கொள்வோம். நமது சுவாச தொகுதியில் , சுவாசவழி மேற்பரப்பு திரவம் (ASL) உள்ளது, இதைத்தான் சளி என்கிறோம். இது, நுரையீரலின் பாதுகாப்பிற்கு உதவுகிறது. சாதாரணமாக சுவாசிக்கும்போது மூக்கு வழியாகச் செல்லும் வெளிப்புற துகள்கள் நுரையீரலை அடையாமல் பாதுகாக்கும் வேலையை சளி செய்கிறது.
அதிகப்படியான சளியை எப்படி போக்குவது?
போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். தினமும் 2.5 முதல் 3.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வது அவசியம். மூலிகைத் தேநீர், சூப், வெந்நீரில் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து குடிப்பது, பாலில் மிளகுத் தூளையும், மஞ்சளையும் கலந்து குடிப்பது என தினசரி வழக்கத்தை வைத்துக் கொண்டால் சளி அதிகப்படியாக உடலில் தங்காது.
சளி இருமல் குணமாக உதவிக் குறிப்புகள்
துளசியில் இருமலை போக்கும் பண்புகள் உள்ளன. சுவாச பாதைகளை சுத்தமாக வைக்க உதவும் துளசியை, காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால், சளி, இருமல் போன்ற தொற்றுகள் ஏற்படாது.
மஞ்சள் பால்
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் கொண்ட மஞ்சள், சளிக்கு நிவாரணம் கொடுக்கிறது. இரவில் தூங்குவதற்கு முன் குடிக்கும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் சேர்த்து குடித்தால், சளி மற்றும் இருமலை எதிர்த்துப் போராட பயனுள்ளதாக இருக்கும். வெதுவெதுப்பான பால் தொண்டை புண் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகமானால்... இந்த அறிகுறிகள் தோன்றும், அலட்சியப்படுத்தாதீர்கள்
ஓமத் தண்ணீர்
தண்ணீரில் ஓமத்தைச் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் நெஞ்சு அடைப்பு நீங்கும். ஜலதோஷத்தில் இருந்து உடனடி நிவாரணம் பெற ஓமம் உதவும்
வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிக்கவும்
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி உப்பு கலந்து குடித்தால், தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
தேன் மற்றும் இஞ்சி சாறு
தேன், இஞ்சிச் சாறு மூக்கில் இருந்து சளி கொட்டுவதை நிறுத்தும். சுவாசக் குழாயிலிருந்து சளியை தேன் மற்றும் இஞ்சி கலந்த கலவை உதவும் .இஞ்சியை தொடர்ந்து பயன்படுத்தி வந்தா, இருமல் அல்லது தொண்டை புண் ஏற்படாது
துளசி நீர்
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் துளசிச் சாற்றை சேர்த்துக் குடிப்பதால் சளி வெளியேறும். இது மூக்கடைப்பைப் போக்கும், சுவாசத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் துளசி போக்கும்.
நீர்ச்சத்து
ஜலதோஷம் இருக்கும்போது மூக்கு ஒழுகுவதால், உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடும். தண்ணீர் குடிப்பது சளியை வெளியேற்ற உதவுகிறது. சளி இருந்தால், வழக்கத்தை விட அதிகமாய் நீர் பருகுங்கள்.
துளசி, இஞ்சி மற்றும் கருப்பு மிளகு சேர்த்து கசாயம் செய்து குடிப்பது, சளியை போக்கும். நுண்ணுயிர் எதிர்ப்பி பண்புகளைக் கொண்ட இந்த கசாயம் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடக்கூடிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | ஈறுகளில் பயங்கர வலியா? ‘இந்த’ வீட்டு வைத்தியங்களை வைத்து சரி செய்து கொள்ளலாம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ