Gingivitis, Sore Gums Home Remedies: ஈறுகளில் ஏற்படும் அழற்சி காரணமாக வலி ஏற்பட்டு, ரத்த கசிவு ஏற்படலாம். வாயில் சரியான சுகாதாரத்தை பேண வில்லை என்றால் இந்த பிரச்சனை ஏற்படும். அப்படி ஏற்படும் வலிகளை, வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே நிவர்த்தி செய்யலாம். இவை, அந்த வலியை சீக்கிரமாக நீக்க உதவும். அவை என்னென்ன வைத்தியங்கள் தெரியுமா?
உப்பு நீரை வைத்து வாய் கொப்பளிக்கலாம்:
உப்பு நீரை வைத்து வாய் கொப்பளிப்பது ஈறு வீக்கத்தை அல்லது ஈறு அழற்சியை சரிசெய்ய உதவும். வாய் சம்பந்தப்பட்ட நோய் பாதிப்புகளை நிவர்த்தி செய்ய சரியாக உபயோகப்படுத்தப்படும் வீட்டு வைத்தியம் இது. உப்பை, சாதாரன நீரில் கலக்கி அதை வாயில் போட்டு கொப்பளிக்க வேண்டும். இதனால், வாயில் உள்ள பாக்டீரியாக்களை நீக்க உதவும். இதனால் வாயில் எரிச்சலூட்டும் ஈறுகள், சரியாகும். இந்த எளிய மருத்துவ முறை மிகவும் பயனுள்ள வகையில் அமையும்.
ஆயில் புல்லிங்:
ஆயுர்வேத முறைகளில் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேங்காய் எண்ணெயில் நுண்ணியிர் எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன. அதனால் இது வாய்வழி சுகாதாரத்தை பாதுகாக்க உதவும். தேங்காய் எண்ணெய்யை 15 முதல் 20 நிமிடங்களுக்கு வாயில் போட்டு கொப்பளிக்க வேண்டும். வாயில் ஏற்படும் ஈறு பாதிப்புகளை குறைக்கவும் இது உதவும். வாய் புண்களையும் இது நீக்கும்.
எலுமிச்சை எண்ணெய்:
சாதாரண மவுத்வாஷை விட எலுமிச்சை எண்ணெயினால் செய்த மவுத்வாஷ், வாய் சுகாதாரத்தை பாதுகாக்க உதவும். வாயில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ளவும், இது உதவும். ஈறு பாதிப்புகளில் ஏற்படும் பாதிப்புகளையும் இது குறைக்கும்.
மேலும் படிக்க | அற்புதங்கள் அடங்கிய அவகாடோ ஜூஸ்... அளவாக குடித்தாலே எக்கச்சக்க நன்மைகள்!
கற்றாழை மவுத்வாஷ்:
கற்றாழை மவுத்வாஷை வாயில் கொப்பளிப்பதால் பல நன்மைகள் ஏற்படும் என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதில் இருக்கும் நற்சத்துகள், ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவும். இது, ஈறு அழற்சி பாதிப்பையும் குறைக்கும். அடிக்கடி கற்றாழையை வைத்து மவுத் வாஷை வைத்து வாய் கொப்பளிப்பது ஈறில் ஏற்படும் வலியை நீக்க உதவும்.
மஞ்சள் பேஸ்ட்:
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட குர்குமின் எனும் சத்து உள்ளது. இதை பேஸ்டாக வைத்து பயன்படுத்துவதால் ஈறுகளுக்கு நன்மை பயக்கும். இந்த பேஸ்டை வைத்து ஈறுகளில் மசாஜ் செய்தால் வீக்கத்தை குறைக்கலாம். இது, ஈறு அழற்சியையும் குறைக்கும்.
பேக்கிங் சோடா:
அனைவர் வீட்டின் சமையலறையிலும் இருக்கும் ஒரு பொருள், பேகிங் சோடா. இது, வாயில் புண் ஏற்படுத்தும் ஆசிட்களை சமநிலைப்படுத்த உதவும். இதை பேஸ்ட்டாக செய்து வலி ஏற்படும் இடத்திலோ, ரத்த கசிவு ஏற்படும் இடத்திலோ அல்லது வீக்கம் அதிகமாக இருக்கும் இடத்திலோ வைத்து தேய்க்கலாம். இந்த சிம்பிள் முயற்சியால், வாய் சுகாதாரத்தை நன்றாக பாதுகாக்கலாம்.
கிராம்பு பேஸ்ட்:
கிராம்பை இயற்கை வலி நிவாரணி என்று கூறுவர். இது, வாயில் உள்ள பாக்டீரியாக்களை நீக்கவும் உதவும். இதனை ஈறுகளில் வைப்பதால் வலி நீங்கி, வாய் நோய் பாதிப்புகளுக்கு எதிராக போராடலாம். வலி ஏற்பட்ட, வீக்கம் ஏற்பட்ட ஈறுகளையும் இது சீர் செய்ய உதவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... இந்த சிம்பிள் ஃபார்முலாவை கடைப்பிடிங்க போதும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ