ஞாபக மறதியை ஓட விரட்ட டயட்டில் சேர்க்க வேண்டிய ‘சில’ உணவுகள்!
இன்றைய காலகட்டத்தில், மோசமான வாழ்க்கை முறை, நமது மன ஆரோக்கியத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில், மோசமான வாழ்க்கை முறை, நமது மன ஆரோக்கியத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நம் நினைவாற்றல் பலவீனமடைந்து, சிறிய விஷயங்களைக்கூட மறந்து விடுகிறோம். சிலருக்கு முந்தைய நாள் என்ன நடந்தது என்பதை கூட ஞாபகபடுத்தி பார்க்கும் அளவுக்கு மறந்து போகிறார்கள். பெரியவர்கள் மட்டுமல்லாது, சில குழந்தைகளுக்கும் கூட, நினைவாற்றல் பாதிக்கப்பட்டு, மூளை வளர்ச்சியும் பாதிக்கிறது.
இந்நிலையில், பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளின் மூளையை கூர்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என விரும்பினால், நாம் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் நினைவாற்றல் பலவீனமாக இருக்கும்போது, அதனை போக்க என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்..
இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலானோருக்கு மறதி உள்ளது. ஆனால் அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் உணவில் சில உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்கலாம். பலர் நினைவாற்றலைக் கூர்மைப்படுத்த பல மருந்துகளை உட்கொள்கிறார்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
நினைவாற்றலைக் கூர்மைப்படுத்த டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகள்:
பாதம் பருப்பு:
பாதாமில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் பி6, வைட்டமின் ஈ போன்ற தனிமங்கள் பாதாமில் உள்ளதால் நமது நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. மறுபுறம், பாதாமில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. பசியையும் கட்டுப்படுத்துகிறது. பாதாம் சாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது. ஊறவைத்த பாதாமை சாப்பிடுவது பெரும் நன்மை அளிக்கும்.
மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!
வாதுமை கொட்டை:
வாதுமை கொட்டை மூளைக்கு ஒரு சூப்பர்ஃபுட் போல செயல்படுகிறது. வாதுமை கொட்டையில் உள்ள ஒமேகா-3 அமிலம், ஆல்பா லினோலினிக் அமிலம், நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. இதுமட்டுமின்றி, வால்நட் சாப்பிடுவதால் எலும்புகளும் வலுவடையும்.
ஆளிவிதை மற்றும் பூசணி விதைகள்:
வைட்டமின் கே, ஏ, சி, பி6, இரும்பு, துத்தநாகம் போன்றவை ஆளிவிதை மற்றும் பூசணி விதைகளில் காணப்படுகின்றன. உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க, நீங்கள் அதை பல வழிகளில் உட்கொள்ளலாம்.
முந்திரி
முந்திரி பருப்பு சாப்பிடுவதால் ஞாபக சக்தி கூடும். முந்திரியில் புரதம், வைட்டமின் சி, போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளன. ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதனை உட்கொள்வதால் செரிமான மண்டலமும் வலுப்பெறுகிறது. மறுபுறம் முந்திரியை தினமும் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் கூர்மையாகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ