Foods for pancreas health: நம் உடலில் சிறிய உறுப்பான கணையத்தின் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பலருக்கு தெரிவதில்லை. இதயம், மூளை, சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கணையத்திற்கு கொடுப்பதில்லை. கணையம் உடலின் மிக முக்கிய ஹார்மோனான இன்சுலின் ஹார்மோனை சுரப்பதோடு, உடலின் வளர் சிதை மாற்றத்திற்கும் அடிப்படையாக இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கணையம் ஹார்மோன்கள் மற்றும் என்சைம்களை சீராக சுரக்கச் செய்து, உடலில்  நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கவும், செரிமானம் எளிதாக நடைபெறவும் உதவுகிறது. கணையத்தில் ஏற்படும் பிரச்சினைகள் நீரிழிவு மற்றும் கணைய அழற்சி போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தும். கணைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்வதன் மூலம், கணையத்தின் ஆரோக்கியத்தை  சிறப்பாக வைத்துக் கொள்ளலாம்


தயிர்


தயிர் சிறந்த புரோபயாடிக் உணவு. இது கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியா கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, தொற்றுநோய்களிலிருந்தும் (Health Tips) நம்மை பாதுகாக்கிறது. 


சர்க்கரை வள்ளிக்கிழங்கு


கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை அடிக்கடி சாப்பிட வேண்டும். இதில் நல்ல அளவு வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது. இது கண் பார்வைக் கூர்மைக்கு உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் காணப்படும் நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. 


காளான்கள்


சைவ மற்றும் அசைவ உணவு பிரியர்கள் இருவருக்கும் பிடித்த உணவான காளானில், புரத சத்து நிறைந்துள்ளது. இதில் புரோட்டீன் மட்டுமின்றி நார்ச்சத்து, வைட்டமின் டி  மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளன. உடல் வீக்கத்தை குறைக்கும் மருத்துவ குணம் கொண்ட காளான்கள், கணையத்தில் வீக்கம் ஏதும் உண்டாகாமல் ஆரோக்கியமாக  வைத்திருக்க உதவுகின்றன.


கீரை


கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதில் வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது கணைய ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்து ஆகும். அது மட்டுமின்றி பல்வேறு நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.


மஞ்சள்


ஆயுர்வேதத்தில் மஞ்சளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இதில் உள்ள குர்குமின், புற்றுநோய் வராமல் தடுக்கும் மருத்துவ குணம் கொண்டது. மஞ்சள் வீக்கத்தை குறைக்கும் குணத்தை கொண்டுள்ளது. பாலுடன் மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம், கணைய ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.


மேலும் படிக்க | உடல் எடையை அட்டகாசமாய் குறைக்கும் இஞ்சி நீர்: 7 நாட்களில் வித்தியாசம் தெரியும்


பூண்டு


கணையத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பூண்டில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை கணையத்தின் வீக்கத்தைக் குறைத்து அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் இது செரிமானத்தையும் மேம்படுத்தும்.


புளுபெர்ரி


புளுபெர்ரி என்னும் அவுரிநெல்லியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி கணையத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அவுரிநெல்லியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால், செரிமானம் மற்றும் கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. 


பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | Sugarfree Tablets: இதய நோய் முதல் புற்றுநோய் வரை... செயற்கை இனிப்புகளின் அதிர வைக்கும் பாதிப்புகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ