கொரோனா தொற்று  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட் இப்போது வேகமாக மீண்டும் பரவிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பல அலைகள் பரவி ஓய்ந்துவிட்ட நிலையில், இப்போது புதிய கொரோனா மாதிரி உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று தமிழகத்திலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இப்போது குறைவான கொரோனா வைரஸ் பாதிப்புகளே பதிவாகி வரும் சூழலில், அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். அதனால் தொற்றுநோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள சரியான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். குறிப்பாக வைட்டமின் டி குறைபாடு உடையவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் 10 மடங்குக்கு மேல் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் என ஆய்வுகள் கூறுகிறது.


மேலும் படிக்க | Weight loss: காபி குடித்தால் உடல் எடையை குறையுமா? உண்மை என்ன?


இஸ்ரேல் ஆய்வு 


இஸ்ரேலில் இருக்கும் பார் இலன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 2020 முதல் 2021 வரை சுமார் 253 கோவிட் நோயாளிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அதில், வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் 87% கொரோனா வைரஸின் கடுமையான ஆபத்துகளை சந்தித்துள்ளனர். இது குறித்து ஆய்வாளர்கள் பேசும்போது, வைட்டமின் டி குறைபாடு இருக்கும் நோயாளிகளிடம் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்ததாகவும், சிகிச்சையில் மற்ற மருந்துகளுடன் வைட்டமின் டி அளவை அதிகரித்தபோது குறிப்பிடத்தகுந்த ரிசல்ட் கிடைத்தாகவும் தெரிவித்துள்ளனர். நோய் எதிர்ப்பு மண்டலம் பலமாகவும், வைரஸை எதிர்த்து போராடுவதிலும் வைட்டமின் டி-யின் பங்கு மிக முக்கியமானது எனத் தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் டி கொரோனாவை கட்டுப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.


வைட்டமின் டி உணவுகள் 


வைட்டமின் டி குறைவாக இருக்கும்பட்சத்தில், அந்த வைட்டமின் அதிகமாக இருக்கும் உணவுகளை அன்றாட உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். மீன், முட்டையின் மஞ்சள் கரு, சிவப்பு இறைச்சி, பால், ஆரஞ்சு பழம், சூரிய ஒளியில் வளர்க்கப்பட்ட காளான் மற்றும் கீரைகளில் அதிகளவு வைட்டமின் டி உள்ளது. இதனை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள முற்படுங்கள். பொறித்த மற்றும் உடலுக்கு கேடான உணவுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். 


மேலும் படிக்க | சிக்கன் - பன்னீர் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ