Weight loss Tips: பலருக்கும் காபி மீது அதீத பிரியம் உண்டு, காபி குடிப்பதால் உடனடி புத்துணர்ச்சி கிடைக்கிறது. பால் கலந்த காபியை விட பிளாக் காபி சிறந்ததாக கருதப்படுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, தினமும் நான்கு கப் காபி குடித்தால், உடல் கொழுப்பை 4 சதவீதம் குறைக்கிறது என்றும் பிளாக் காபியை குடிக்கும்போது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம் இனிப்பு சேர்க்காமல் பிளாக் காபி குடிப்பது இன்னும் கூடுதல் பலன்களை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பிளாக் காபியில் கலோரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், இதனை குடிப்பது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கிரவுண்ட் பீன்ஸிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு கப் பிளாக் காபியில் இரண்டு கலோரிகள் உள்ளன, அதே நேரத்தில் ஒரு அவுன்ஸ் எஸ்பிரெசோவில் ஒரு கலோரி மட்டுமே உள்ளது. மேலும் காஃபின் நீக்கப்பட்ட பீன்ஸைப் பயன்படுத்தினால் அதில் கலோரி எண்ணிக்கை பூஜ்ஜியமாகக் குறையும்.
மேலும் படிக்க | Constipation: மலச்சிக்கலுக்கே சிக்கல் கொடுக்கும் ‘இவற்றை’ ஃபாலோ பண்ணலாமே?
பிளாக் காபியை அளவாக பருகும்போது எந்த தீமையும் இல்லை, இருப்பினும் அதிகப்படியான காபி தூக்கமின்மை, பதட்டம், வேகமான இதயத் துடிப்பு, வயிற்று வலி, தலைவலி மற்றும் குமட்டல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. பிளாக் காபியில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் எடை இழப்புக்கு உதவுகிறது. இது உணவுக்குப் பிறகு இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் ஸ்பைக்கைக் குறைக்கிறது, இதன் விளைவாக காலப்போக்கில் எடை குறைகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனை குடிப்பதால் உடலில் புதிய கொழுப்பு செல்களின் உற்பத்தியில் தாமதம் ஏற்படுகிறது, அதாவது உடலில் கலோரிகள் குறைகிறது. காபியில் உள்ள காஃபின் உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது, குறிப்பாக இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி கிரெலின் எனும் பசி ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிகப்படியான உணவு உட்கொள்ளப்படுவது தடுக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.
பச்சை காபி பீன்ஸில் உடலின் கொழுப்பை எரிக்கும் திறன் உள்ளது, இது உடலிலுள்ள அதிக கொழுப்பை எரித்து கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மேலும் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் மிதமிஞ்சிய லிப்பிட்களைக் குறையிது வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. பிளாக் காபி உடலில் இருந்து அதிகப்படியான தண்ணீரை அகற்றி, எடை இழப்புக்கு வழிவகுக்கிறது, இருப்பினும் இந்த எடை இழப்பு தற்காலிகமானது தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காபியில் நிறைந்துள்ள காஃபின் டையூரிடிக் பண்புகளைக் கொண்டிருப்பதால் சிறுநீர் வெளியீட்டை அதிகரிக்கிறது, இதனால் உடலில் அதிகப்படியாக உள்ள நீரின் எடை குறைகிறது.
மேலும் படிக்க | எலுமிச்சை பழம் நல்லதுதான்! ஆனால் இந்த பக்கவிளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ