Foods for pancreas health: நம் உடலில் கணையம் செய்யும் வேலைகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பலருக்கு தெரிவதில்லை. இதயம் சிறுநீரகம் ஆகிய உறுப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் கணையத்திற்கு கொடுப்பதில்லை. கணையம் உடலின் மிக முக்கிய ஹார்மோனான இன்சுலினை சுரப்பதோடு, உடலின் வளர்ச்சியை மாற்றத்திற்கும் அடிப்படையாக இருக்கிறது. ஹார்மோன்கள் மற்றும் என்சைவுகளை சுரக்கச் செய்து, உடலில் செரிமானம் எளிதாக நடைபெறவும், நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கவும் கணையம் உதவுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கணையத்தில் ஏற்படும் பாதிப்புகள்


சிறுநீரகத்தைப் போல கணையத்தில் கற்கள் வரலாம். வீக்கம் அழற்சி போன்ற பாதிப்புகள் வரலாம். என் புற்றுநோய் கூட வரலாம். கணையத்தின் செயல் திறன் குறைந்துவிட்டால் செரிமான கோளாறு ஏற்படும். செரிமான பிரச்சனை தான், பல நேரங்களில் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கணையத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.


தயிர்


ப்ரோபயோடிக் உணவான தயிர், கணையத்தில் ஏற்படும் நோய் தொற்று பாதிப்பை தடுப்பதோடு, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. தயிர் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பல வகைகளில் உடலுக்கு நன்மை பயக்கிறது.


சர்க்கரை வள்ளி கிழங்கு


பீட்டா கரோட்டின் நிறைந்த சக்கரை வள்ளி கிழங்கு, கணயத்தை புற்றுநோய் வருவதில் இருந்து பாதுகாக்கும். மேலும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்தது. மேலும் இதில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, தாமிரச்சத்து, மெக்னீசியம் போன்றவை உள்ளன.


பசலைக் கீரை


இரும்பு சத்து நிறைந்த பசலைக்கீரையில் கணைய ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் பி நிறைந்துள்ளது. பசலைக் கீரையை, வாரத்தில் இரண்டு முறை சேர்த்துக் கொள்வது கணையத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும்.


மேலும் படிக்க | Asafoetida: உணவில் தினமும் ஒரு சிட்டிகை பெருங்காயம் செய்யும் ஆரோக்கிய மாயம்! டிரை பண்ணி பாருங்க!


பூண்டு


பூண்டில் அன்லிசின் என்னும் பயோ ஆக்டிவ் பொருள் உள்ளது. இது கணையத்தில் கட்டிகள் ஏற்படாமல் பாதுகாக்கும். தினசரி உணவில் சிறிதளவு பூண்டு சேர்த்துக் கொள்வது கணைய ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் பூண்டு கொழுப்பை கரைக்கும் என்பதால், கொலஸ்ட்ராலையும் கட்டுக்குள் வைக்கலாம்.


மஞ்சள்


மஞ்சள் குறைக்கும் குணத்தை கொண்டுள்ளது. ஆயுர்வேதத்தில் மஞ்சளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இதில் உள்ள குர்குமின், புற்றுநோய் வராமல் தடுக்கும் மருத்துவ குணம் கொண்டது. பாலுடன் மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம், கணைய ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.


காளான்கள்


ப்ரோடீன் சத்து நிறைந்த காளான்கள், சைவ மற்றும் அசைவ உணவு பிரியர்கள் இருவருக்கும் பிடித்த உணவாக உள்ளது. இதில் புரதச்சத்து மட்டுமின்றி நார்ச்சத்து, வைட்டமின் டி சத்து மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. வீக்கத்தை குறைக்கும் மருத்துவ குணம் கொண்ட காளான்கள், கணையத்தில் வீக்கம் ஏதும் ஏற்படாமல் ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகின்றன.


கிரீன் டீ


கிரீன் டீயில் ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது. அதோடு இதில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. கணையத்தில் ஏற்படும் அழற்சியை குறைக்கும் சக்தி கிரீன் டீக்கு உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.


பெர்ரி பழங்கள்


ஸ்ட்ராபெரி, ப்ளூபெர்ரி போன்ற பெர்ரி பழங்களில் உள்ள பிளவர் நாயுடுகள், கணைய செல்களுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்கின்றன. இதன்மூலம் கணையத்தின் ஆரோக்கியம் மேம்படும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சாத்துக்குடி ஜூஸை தினமும் குடித்தால் - என்னென்ன பலன்கள்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ