சாத்துக்குடி ஜூஸை தினமும் குடித்தால் - என்னென்ன பலன்கள்?

Sathukudi Juice Health Benefits: கோடை காலத்தில் தினமும் சாத்துக்குடி ஜூஸை அருந்துவதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இதில் தெரிந்துகொள்ளலாம்.

  • Feb 16, 2024, 07:14 AM IST

சாத்துக்குடி (Mosambi) பழத்தை வாங்கி அதனை வீட்டிலேயே எளிமையாக தயார் செய்யலாம். தண்ணீர், நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றை கலந்து நீங்கள் பருகலாம். இவை கடைகளில் கூட எளிமையாக மலிவு விலையில் கிடைக்கும்.

1 /7

வெயில் காலத்தில் நாம் தண்ணீர் குடிப்பது மிக மிக முக்கியமாகும். அதேபோல, நீராகாரம் என்ற முறையில் பழச்சாறுகளை குடிப்பதும் உடலுக்கு நன்மையை தரும். சர்க்கரை, பால் சேர்க்காமலும் பழச்சாறுகளை குடிக்கலாம். அந்த வகையில், நம்மிடைய பொதுவாக அறியப்படுவதுதான் சாத்துக்குடி ஜூஸ் (Sathukudi Juice).  

2 /7

வரும் கோடை காலத்தில் சாத்துக்குடி ஜூஸை சர்க்கரை சேர்க்காமல், குறைந்தபட்சம் வாரம் மூன்று முறை எடுத்துக்கொள்வது மூலம் உஙகள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.   

3 /7

வயிற்று புண்களை சரியாக்கும்: சாத்துக்குடி ஜூஸில் உள்ள அமில தன்மை உங்கள் வயிற்று புண்களை சரியாக்கும். அதுமட்டுமின்றி, வயிற்று வலியையும் போக்கவல்லது.  

4 /7

கிட்னியில் கல்லா...?: உங்களின் அன்றாட உணவில் சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை சேர்த்துக்கொள்வதன் மூலம் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவது தடுக்கப்படும். ஒருவேளை கல்லடைப்பு இருந்தாலும் இதனை குடிப்பதன் மூலம் வலியையும் குறைந்தது, கல்லடைப்பையும் நீக்கும்.   

5 /7

எலும்புகள் வலுப்படும்: சாத்துக்குடி ஜூஸை குடிப்பதன் மூலம் அதில் உள்ள வைட்டமிண் சி உடலுக்கு வலுசேர்க்கும். இதன்மூலம், ஒட்டுமொத்தமாக எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.   

6 /7

நோய் எதிர்ப்பு சக்தி: சாத்துக்குடி ஜூஸை அடிக்கடி குடிக்க வேண்டியதன் முக்கிய காரணமே இதுதான். சாத்துக்குடி ஜூஸின் முக்கிய நன்மையே நோய் எதிர் சக்தியை வலுப்படுத்தும் என்பதுதான். வைட்டமிண் சி மற்றும் மற்ற ஆண்டிஆக்ஸிடண்ட்கள் இதில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி வலுவானால் காய்ச்சலோ, சளியோ பிடிக்காது. மேலும், ரத்த ஓட்டத்தையும் இது அதிகரிக்க உதவும்.   

7 /7

பிற நன்மைகள்: செரிமான பிரச்னைகளை போக்குவது, உடலை நீரேற்றமாக வைத்திருப்பது, உடல் எடை குறைப்பில் உதவுவது என சாத்துக்குடி ஜூஸில் இன்னும் பல நன்மைகள் உள்ளன. இருப்பினும், அதனை எந்தளவிற்கு எடுத்துக்கொள்ளலாம் என்பதற்கு ஊட்டச்சத்து நிபுணர்கள், மருத்துவர்களிடம் ஆலோசனைகள் கேட்பது நலம். (பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துகள் மற்றும் வீட்டு வைத்தியம் சார்ந்தது. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை)