Uric Acid Control: யூரிக் அமில பிரச்சனை இந்நாட்களில் பலரிடம் காணப்படும் பொதுவான ஒரு பிரச்சனையாக உள்ளது. உடலில் உள்ள பியூரின் எனப்படும் தனிமங்களின் முறிவினால் யூரிக் அமிலம் உருவாகிறது. இந்த கூறுகள் சில உணவுப் பொருட்களில் காணப்படுகின்றன. இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமானால் பல பிரச்சனைகள் ஏற்படலாம். கீல்வாதம், மூட்டு வலி, சிறுநீரக கற்கள் போன்ற நோய்கள் ஏற்பட இது காரணமாகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யூரிக் அமிலத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும்? யூரிக் அமிலத்தைக் குறைக்க பலர் பல வித மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். எனினும், சில எளிய, இயற்கையான வழிகளிலும் இதை குறைக்கலாம். உணவில் மாற்றங்களைச் செய்வதன் மூலமும் யூரிக் அமிலத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும் சில உணவுப் பொருட்களைப் பற்றி இங்கே காணலாம். 


காய்கறிகள்


பல காய்கறிகளில் பியூரின்கள் குறைவாக உள்ளன. யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளவர்கள் இவற்றை தங்கள் டயட்டில் சேர்க்கலாம். ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் பிற பச்சைக் காய்களும் கீரை வகைகளும் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவும். 


பருப்பு வகைகள்


பருப்பு வகைகள், ராஜ்மா, கொண்டைக்கடலை போன்றவற்றில் புரதம் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளன. பொதுவாக இவற்றில் பியூரின்கள் குறைவாக உள்ளன. யூரிக் அமிலத்தைக் குறைக்க இவற்றை சமச்சீர் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள்


கொழுப்பு நீக்கப்பட்ட பால், தயிர் மற்றும் சீஸ் போன்ற குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும். பால் பொருட்களை உட்கொள்வது கீல்வாதத்திலிருந்து பாதுகாக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை மூட்டு வலிக்கும் நிவாரணமாக அமையும். 


முழு தானியங்கள்


ஓட்ஸ், பார்லி, கினோவா மற்றும் பிரவுன் அரிசி போன்ற முழு தானியங்கள் யூரிக் அமிலத்தைக் குறைக்கும் உணவில் சேர்க்கக்கூடிய சத்தான கார்போஹைட்ரேட்டுகளின் நல்ல ஆதாரங்களாக உள்ளன. இவற்றில் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை விட குறைவான அளவில் பியூரின்கள் உள்ளன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். 


சிட்ரஸ் பழங்கள்


ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து உட்கொள்வதால், யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்கலாம். மேலும், இவற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரக கல் உருவாவதை தடுக்க உதவுகிறது.


மேலும் படிக்க | பிபி அளவு கட்டுக்குள் இருக்க... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை..!!


ஆப்பிள்


ஆப்பிளில் மாலிக் அமிலம் உள்ளது. இது யூரிக் அமிலத்தை செயலற்றதாக்கி உடலில் இருந்து அகற்ற உதவுகிறது. ஆப்பிள்களை தவறாமல் சாப்பிடுவது யூரிக் அமிலத்தை குறைக்க உதவுவட்தோடு கீல்வாத தாக்குதல்களின் அபாயத்தையும் குறைக்கிறது.


செர்ரி


புளிப்பு சுவை கொண்ட செர்ரி பழங்களில், அழற்சி எதிர்ப்பு கலவைகள் உள்ளன. இவை யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும். அந்தோசயினின்கள் எனப்படும் கூறுகளும் இவற்றில் இருக்கின்றன. அவை வீக்கத்தைக் குறைப்பதிலும் யூரிக் அமிலத்தைக் குறைப்பதிலும் பயனுள்ளதாகக் கருதப்படுகின்றன.


பெர்ரி


ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி வகைகளில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இவை வீக்கத்தைக் குறைக்கவும் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடலுறவு வைத்துக்கொண்டால் உடல் எடையை குறைக்கலாமா? அது எப்படி சாத்தியம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ