கிட்னியை பாதுகாக்கும் உணவுகள்! சிறுநீரகத்தின் ஆயுளை நீட்டிக்கும் சுலப வழி
Healthy Food For Kidney: சிறுநீரகம் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் முக்கியமான உறுப்பு ஆகும். சிறுநீரை உற்பத்தி செய்வதோடு, இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கும் ஹார்மோன்களை சுரக்கும் கிட்னி, ஆரோக்கியமாக இருக்க இந்த உணவுகள் போதும்
Healthy Food For Kidney: சிறுநீரகம் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் முக்கியமான உறுப்பு ஆகும். சிறுநீரை உற்பத்தி செய்வதோடு, இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கும் ஹார்மோன்களை சுரக்கும் கிட்னி, ஆரோக்கியமாக இருக்க இந்த உணவுகள் போதும். இரத்தத்தில் உள்ள அழுக்குகளை வடிகட்டும் சிறுநீரகம், தனது பணியை சரியாக செய்யவில்லை என்றால், உடலில் பல பிரச்சனைகள் ஏற்படலாம், எனவே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறுநீரகத்தை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம். சிறுநீரகம் நீண்ட காலம் நன்றாக வேலை செய்ய இந்த உணவுகள் உதவியாக இருக்கும்.
எலுமிச்சை
எலுமிச்சை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் அருமருந்து ஆகும். வைட்டமின் சி பரிபூரணமாக நிறைந்துள்ள எலுமிச்சையில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது உடலின் நச்சுத்தன்மையை அகற்ற உதவுகிறது. எலுமிச்சையை நமது உணவில் சேர்க்கலாம். அதிலும், காலை உணவில் எலுமிச்சையை சேர்த்துக் கொண்டால், அது சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். எலுமிச்சை சாறு செய்து குடிப்பதும் நல்லது.
மேலும் படிக்க | ஆரோக்கியத்தை கொடுக்கும் சோளக்கருது! இங்க சாப்பிட்டா ஆரோக்கியத்துக்கே ஆப்பு வைக்கும்
முட்டை
முட்டையில் புரதம் நிறைந்துள்ளது. சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க, தினசரி முட்டை உட்கொள்ள வேண்டும். வேகவைத்த முட்டைகளை சாப்பிடுவது நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.
இஞ்சி
கால்சியம், அயோடின், இரும்பு போன்ற தாதுக்கள் இஞ்சியில் ஏராளமாக உள்ளன. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் உடலின் இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.
பூண்டு
பூண்டில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். பூண்டு சிறுநீரகத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதில் உள்ள மாங்கனீசு, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 ஆகியவற்றின் பண்புகள் சிறுநீரகத்திற்கு நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி
முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர்
சிறுநீரக நோயைத் தவிர்ப்பதற்கு முட்டைக்கோஸ் சாப்பிடுவது நல்லது என சொல்லப்படுகிறது. முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர் இரண்டும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படும் பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் சோடியம் ஆகியவை இதில் சிறிய அளவில் உள்ளன. அவை வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் ஃபோலேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
கொத்தமல்லி
சிறுநீரகத்தை சுத்தம் செய்ய கொத்தமல்லி பயனுள்ளதாக இருக்கும். மாங்கனீசு, இரும்புச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கொத்தமல்லியை தினசரி சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ