புதுடெல்லி: சரியான எடையை பராமரிக்கவும் எடை குறைக்கவும் ஊக்கும் உணவுகள் இவை. கோடையில் உடல் எடையை குறைக்க எந்தெந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடையை குறைப்பது எளிதான காரியம் அல்ல என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. ஆனால் கடின உழைப்பு இருந்தால் அது சாத்தியம் என்று பலரும் கருதுகின்றனர். இந்த எண்ணம், உடல் எடை குறைக்க விரும்புபவர்களை சோர்வடையச் செய்யும்.


உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க சரியான காலம் கோடைக்காலம். சரியான எடையை பராமரிக்கவும் உடல் எடையை குறைக்கவும் பருவங்கள் முக்கியமானவை.


மேலும் படிக்க | ஆரோக்கிய நன்மை அதிகமாக உள்ள ஐஸ் டீ


சூரிய ஒளி மற்றும் வெப்பமான வானிலை உடல் எடையை குறைத்து ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது, உடலில் இருந்து வெளியேறும் வியர்வை கொழுப்பை எரிக்கிறது. கோடையில் உடல் எடையை குறைக்க எந்தெந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்பதை தெரிந்து பின்பற்றவும்.


கோடைகால கொழுப்பை எரிக்கும் உணவுகளின் பட்டியல்
தயிர்
தயிர் அதன் ஊட்டச்சத்து பண்புகளுக்கு மட்டுமல்ல, அதன் சுவைக்காகவும் பெயர் பெற்றது. தயிரில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை குறைக்கவும், உடலை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கவும் உதவுகிறது.



இது மற்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது, கோடை காலத்தில் உண்பதற்கு மிகவும் ஏற்றது தயிர்.


குடைமிளகாய்


வைட்டமின் சத்துக்கள் அபரிதமாக இருக்கும் குடைமிளகாயை உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டும். குடமிளகாயில் உள்ள வைட்டமின்கள் உங்கள் உடல் புரதத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.



ஆரஞ்சு பழத்தை விட கேப்சிகத்தில் அதிக வைட்டமின் சி உள்ளது, இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.


ஐஸ் கிரீன் டீ
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், காபி மற்றும் கிரீன் டீ குடிக்கலாம். இந்த இரண்டு பானங்களும் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், ஆற்றல் அளவை அதிகரிக்கவும் வேலை செய்கின்றன.



கோடையில் சூடான பானங்களை குடிப்பதைவிட ஐஸ் கிரீன் டீ மற்றும் குளிர் பானங்களைக் குடிக்கலாம்.


தர்பூசணி
தர்பூசணியில் 92 சதவிகிதம் தண்ணீர் உள்ளது, இது உங்களை புத்துணர்ச்சியுடனும், நீரேற்றமாகவும் வைத்திருக்கும்.



அதுமட்டுமின்றி, இந்தப் பழத்தில் கலோரிகளும் மிகக் குறைவாகவே உள்ளது. இது உங்கள் உடலில் சரியான அளவு நீரை பராமரிக்க உதவுகிறது. இந்த இரண்டு காரணிகளும் கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகின்றன.


என்ன சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்கிறீர்கள் மற்றும் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது என்பவை அனைத்தும் உடல் எடையை குறைக்கும் பயணத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.


மேலும்  படிக்க | Processed Food: பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு குட்பை சொல்ல இதைவிட வேற காரணம் தேவையா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR