Skin Care Tips: முகத்தை பளபளப்பாக்கும் ஜூஸ் இதுதான், ட்ரை பண்ணுங்க
Amla Juice For Skin: பலர் சுருக்கங்களைக் குறைக்க பல வகையான கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் நெல்லிக்காய் சில நிமிடங்களிலேயே தோல் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்க உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சருமத்திற்கு நெல்லிக்காய் ஜூஸின் நன்மைகள்: நெல்லிக்காய் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் நெல்லிக்காயில் இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளது. மறுபுறம் முகத்தில் தேவையான சத்துக்கள் கிடைக்காததால் சுருக்கம் அல்லது சருமம் பொலிவிழுதல் போன்ற பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். இந்த விஷயத்தில் நெல்லிக்காய் உங்களுக்கு உதவும். பலர் சுருக்கங்களைக் குறைக்க பலவிதமான கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் நெல்லிக்காய் சில நிமிடங்களில் தோல் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். எப்படி என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
நெல்லிக்காய் சாற்றை இவ்வாறு முகத்தில் தடவவும்-
நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் தேன்
முக சுருக்க பிரச்சனையால் நீங்கள் சிரமப்பட்டால், நெல்லிக்காய் சாறு மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவலாம். இதைப் பயன்படுத்த, 4 ஸ்பூன் நெல்லிக்காய் சாற்றில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தயார் செய்துக் கொள்ளவும். இப்போது இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் சாதாரண நீரில் கழுவவும். இவ்வாறு செய்வதன் மூலம் பளபளப்பான சருமத்தைப் பெறுவதோடு, முக சுருக்க பிரச்சனையும் நீங்கும்.
நெல்லிக்காய் சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய்
நெல்லிக்காய் சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய் உங்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க உதவுகிறது. இதைப் பயன்படுத்த, ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் இரண்டு டீஸ்பூன் நெல்லிக்காய் சாறு கலந்து பேஸ்ட் செய்யவும். இப்போது இந்த பேஸ்ட்டை முகத்தில் 10 நிமிடங்கள் தடவவும். அதன் பிறகு தண்ணீரில் முகத்தை கழுவவும். இந்த பேஸ்ட்டைப் பயன்படுத்துவதால் சருமம் பளபளக்கும், ஆனால் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
நெல்லிக்காய் சாறு மற்றும் வாழைப்பழ பேஸ்ட்
நெல்லிக்காய் சாறு மற்றும் வாழைப்பழ பேஸ்ட்டை முகத்தில் தடவினால் சுருக்கங்கள் பிரச்சனை நீங்கும். இதைப் பயன்படுத்த, வாழைப்பழத்தை மசித்து, 2 டீஸ்பூன் நெல்லிக்காய் சாறு கலந்து இந்த கலவையை தயார் செய்து, இந்த பேஸ்ட்டைப் பயன்படுத்தவும். இதை வாரம் இருமுறை பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்துவதன் மூலம் முகச் சுருக்கம் நீங்கி முகம் பொலிவு பெறும்.
(பொறுபுத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சட்டுனு எடை குறையணுமா? பட்டுனு இந்த ஜூஸ் குடிங்க!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ