புற்றுநோய் சிகிச்சைக்கு பசு மாட்டின் கோமியத்தை பயன்படுத்தி மருந்து தயாரிப்பது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே வெளியிட்டுள்ள தகவலில், பசுமாட்டின் கோமியம் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. பல்வேறு நோய்களுக்கு பசுமாட்டின் கோமியம் மருந்தாக பயன்படுகிறது என்பது இந்துக்களின் ஒரு நம்பிக்கையாக இருக்கிறது. அதன்படி, புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கான மருந்து தயாரிப்பதில் பசுவின் கோமியத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


குணப்படுத்த இயலாத நோய்களுக்கும் இதனை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மருந்துகள் பயன்படும். எனவே இது தொடர்பாக தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் கூட தினமும் பசுவின் கோமியத்தை குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்" என்று தெரிவித்தார்.


முன்னதாக பாஜக எம்பி பிரக்யாசிங் தாகூர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தான் பசுவின் கோமியம் கலந்த மூலிகை மருந்தை சாப்பிட்டு குணமடைந்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.