கிரீன் டீ தெரியும்... கிரீன் காபி தெரியுமா... வியக்க வைக்கும் ஆரோக்கிய பலன்கள்!
கிரீன் டீயை போலவே கிரீன் காபியும் மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. அதன் நுகர்வு (Green Coffee Benefits) பல தீவிர நோய்களை தடுக்கிறது.
காபி அல்லது டீ இல்லாமல் பலருக்கு ஒரு நாளை தொடக்குவதை நினைத்து பார்க்க முடியாது. இருப்பினும் பலர் தங்கள் ஆரோக்கியத்தை மனதில் வைத்து பல்வேறு வகையான தேநீர் குடிப்பார்கள். இதில், பெரும்பாலானோர் கிரீன் டீயை விரும்பி அருந்துகின்றனர். ஏனென்றால் கிரீன் டீ மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. கிரீன் டீயை போலவே கிரீன் காபியும் மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. அதன் நுகர்வு (Green Coffee Benefits) பல தீவிர நோய்களை தடுக்கிறது. இந்த காபி ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். இந்த ஸ்பெஷல் காபியில் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் அளவு அதிகமாக உள்ளது (Green Coffee) மற்றும் காஃபின் அளவு மிகக் குறைவு. இது சர்க்கரையின் அளவை சாதாரணமாக வைத்து பல நோய்கள் வராமல் தடுக்கிறது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் பிளாக் காபி குடித்து இருப்போம். ஆனால் நன்மை என்று வரும் போது இந்த க்ரீன் காபி அவற்றை தோற்கடிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். காபி கொட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பிளாக் காபியை விட க்ரீன் காபி ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது
ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் ஆதாரமாக உள்ள கிரீன் காபி
கிரீன் காபி பீன்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதனால், சிறந்த டீடாக்ஸ் பானமாகவும் இருக்கும். இதில் குறைந்த அளவிலான பொட்டாசியம் மற்றும் சோடியம் உள்ளது. இது உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பச்சை காபி பீன்ஸில் இயற்கையாகவே இருக்கும் குளோரோஜெனிக் அமிலம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது
நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் கிரீன் காபி
கிரீன் காபி நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் அதை குடிப்பது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இது உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தால், கிரீன் காபியை உங்கள் உணவில் எளிதாக சேர்க்கலாம்.
உடலுக்கு ஆற்றல் கொடுக்கும் கிரீன் காபி
க்ரீன் காபி எனர்ஜி பூஸ்டர் என்று அழைக்கப்படுகிறது, நீங்கள் அடிக்கடி சோர்வாக உணர்ந்தால், நீங்கள் கிரீன் காபி குடிக்கலாம். இதை குடிப்பதால் உடலுக்கு உடனடி சக்தி கிடைப்பதுடன் உடலில் இருக்கும் மந்தம் நீங்கும்.
கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் கிரீன் காபி
கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு, கிரீன் காபி கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. க்ரீன் காபியை தவறாமல் உட்கொள்வதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தடுக்கலாம் என்று உங்களுக்குச் சொல்வோம்.
சருமத்திற்கு நன்மை பயக்கும் கிரீன் காபி
கிரீன் காபியில் கொழுப்பு அமிலம், ரோடிக் அமிலம், லினோலிக் அமிலம் மற்றும் ஒலிக் அமிலம் ஆகியவை உள்ளன, இவை சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க அவசியம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பெண்களைவிட ஆண்களுக்கு கருவுறுதல் தன்மை அதிக வயதுக்கு இருக்கும்! இது உண்மையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ