பெண்களைவிட ஆண்களுக்கு கருவுறுதல் தன்மை அதிக வயதுக்கு இருக்கும்! இது உண்மையா?

Freezing Sperms: வயது அதிகமாகும்போது ஆணின் விந்தணுவின் தரம் குறையும் என்பதால், விந்தணுக்களை சேமித்து வைப்பது பயன் தருமா? மருத்துவர்களின் அட்வைஸ் என்ன? 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 2, 2023, 10:10 PM IST
  • ஆணின் விந்தணுவின் தரம்
  • விந்தணுக்களை சேமித்து வைப்பது பயன் தருமா?
  • மருத்துவர்களின் அட்வைஸ்
பெண்களைவிட ஆண்களுக்கு கருவுறுதல் தன்மை அதிக வயதுக்கு இருக்கும்! இது உண்மையா? title=

புதுடெல்லி: இன்றைய காலகட்டத்தில், பல தம்பதிகள் கர்ப்பத்தை தள்ளிப்போடுகிறார்கள், பொருளாதார ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மனரீதியாகவும் பெற்றோராக ஆவதற்குத் தயாராகும் வரை, பெண்கள் கருமுட்டையை பாதுகாப்பது போன்ற நடைமுறைகளை பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றன. மருத்துவத்தில் ஓசைட் கிரையோபிரெசர்வேஷன் (oocyte cryopreservation) என்றும் அழைக்கப்படும், முட்டை உறைதல் என்பது கருவுறுதல் பாதுகாப்பு நுட்பம் ஆகும்.

இந்த முறையில் ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து முட்டைகள் பிரித்தெடுக்கப்பட்டு, எதிர்காலத்தில் இனப்பெருக்க தொழில்நுட்ப (ART) நடைமுறைகளைப் பயன்படுத்தி கர்ப்பம் தரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆண்களுக்கும் இதேபோன்ற செயல்முறை உள்ளதா? அவர்களின் விந்தணுவை உறைய வைப்பது சாத்தியமா?

இன்ஸ்டாகிராமில் 'டாக்டர் க்யூட்ரஸ்' என்று பிரபல மருத்துவர் டாக்டர் தனயா, விந்தணுவை பாதுகாத்தல் தொடர்பான வாய்ப்புகளை விளக்கினார். "சராசரியாக, ஆண்கள் ஒரு வினாடிக்கு 1,500 விந்தணுக்களை உருவாக்குகிறார்கள். இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், ஆண்கள் எல்லா நேரத்திலும் விந்தணுக்களை உருவாக்கிக் கொண்டிருப்பதால், அவர்களின் கருவுறுதலில் வயதின் தாக்கம் இல்லை" என்று அவர் அநத காணொலியில் கூறினார். 

மேலும் படிக்க | அசிடிட்டி பிரச்சனையை போக்கும் அற்புத உணவுகள்! அமில சுரப்பை குறைக்க வீட்டு வைத்தியம்

கருவுறுதலும், கருமுட்டை சேமித்தலும்
30 வயது கடக்கும் பெண்ணாக இருந்தால், உங்கள் கருவுறுதலைத் திட்டமிடுவதற்கான நேரம் இது என்று மருத்துவர் பரிந்துரைக்கிறார். "இப்போதுதான் நீங்கள் விரைவாகச் செயல்பட வேண்டும், உங்கள் குடும்பத்தைத் திட்டமிட வேண்டும், ஏனென்றால் வயதாகும்போது, குறிப்பாக 30 மற்றும் 30களின் நடுப்பகுதியில், பெண்களின் கருவுறுதல் தன்மை வியத்தகு முறையில் குறைகிறது. இந்த பிரச்சனை ஆண்களுக்கு இல்லை, மேலும் அவர்கள் புதிய விந்தணுக்களை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றனர்" என்று விளக்கம் அளிக்கிறார்.

ஆனால், ஒரு ஆணின் வயது எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவருடைய விந்தணுவின் தரம் குறையும் என்பதையும் அவர் குறிப்பிட்டு சொன்னார். "ஒரு ஆண், வயதான பிறகு தந்தையானால், பிறக்கும் குழந்தைக்கு  நீரிழிவு மற்றும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுகள் அதிக ஆபத்துள்ள குழந்தைகள் பிறக்கலாம்" என்று மருத்துவர் எச்சரிக்கிறார்.

எவ்வாறாயினும், விந்தணுக்களை சேதப்படுத்தும் புற்றுநோய் சிகிச்சை அல்லது கீமோதெரபி போன்றவற்றை எடுத்துக் கொள்ளும் ஆண்கள், தங்கள் விந்தணுக்களை சேமித்துவைப்பதன் மூலம் பயனடையலாம் என்று நிபுணர் கூறினார்; பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவர்கள்; வாஸெக்டமி செய்யப் போகிறவர்கள் என பல தரப்பட்ட ஆண்கள் விந்தணு சேமிப்பு என்ற தெரிவை தேர்ந்தெடுக்கலாம்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில், சில பழங்கள், காய்கறிகள் மற்றும் மீன் வகைகள் போன்ற ஆரோக்கியமான உணவுகள், இந்த விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் சிவப்பு இறைச்சி, பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை அறவே தவிர்த்திட வேண்டும் என்று தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | எந்த ஒயின் உங்களுக்கு ஒத்துக்கும்? காபியில் எது பெஸ்ட்? கண்டறியும் செயற்கை நுண்ணறிவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News