வெயிட் லாஸ் முதல் டீடாக்ஸ் வரை... முள்ளங்கியை மிஸ் பண்ணவே கூடாது
முள்ளங்கி பல வகைகளில் நமது சமையலில் பயன்படுத்தப்படுகிறது. ஆரோக்கிய நலன்கள் என்று வரும் போது முள்ளங்கி வியக்கத்தக்க வகையில் பலன்களை கொடுக்கிறது.
முள்ளங்கி பல வகைகளில் நமது சமையலில் பயன்படுத்தப்படுகிறது. ஆரோக்கிய நலன்கள் என்று வரும் போது முள்ளங்கி வியக்கத்தக்க வகையில் பலன்களை கொடுக்கிறது. முள்ளங்கி ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம். முள்ளங்கியில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும், வைட்டமின் சி ஊட்டச்சத்தின் ஆதாரமாகவும் உள்ளது. இது தவிர, முள்ளங்கியில் ஃபோலேட், வைட்டமின் பி6, பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன.
உடல் எடையை குறைப்பது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது, செரிமானத்தை வலுப்படுத்துவது, நீரிழிவை கட்டுப்படுத்துவது, சிறுநீரகத்தை வலுப்படுத்துவது, இதய ஆரோக்கியத்திற்கு பங்களிப்பது என முள்ளங்கி எண்ணற்ற நனமைகளை வழங்குவதால், உங்கள் அன்றாட உணவில் இடம் பெறத் தகுதியான காய்கறியாக இருக்கும்.
முள்ளங்கியை உங்கள் டயட்டின் முக்கிய உணவாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான வலுவான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
உடலை டீடாக்ஸ் செய்ய உதவுகிறது
முள்ளங்கி உடலின் இயற்கையான நச்சு நீக்கும் பொருளாக செயல்படுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்ற உதவுகிறது. முள்ளங்கியை உட்கொள்வது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் (Kidney Health) உள்ள நச்சுக்களை நீக்கி, அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
முள்ளங்கியில் நல்ல அளவு வைட்டமின் சி உள்ளது, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. குளிர் காலத்தில் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும். முள்ளங்கியை உட்கொள்வது இந்த பிரச்சனைகளைத் தடுக்க உதவும். வைட்டமின் சி உடல் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவுகிறது, இதனால் தொற்று அபாயத்தைக் குறைக்கிறது.
செரிமான ஆரோக்கியம்
முள்ளங்கியில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கிறது. மேலும், அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் போன்ற வயிற்று பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. முள்ளங்கியை வழக்கமாக உட்கொள்வது குடலை சுத்தமாக வைத்திருப்பதுடன், உணவை சரியாக ஜீரணிக்க உதவுகிறது. இது செரிமான பிரச்சனைகளின் ஆபத்தை பெருமளவு குறைக்கும்.
உடலில் நீர் சத்து குறையாமல் இருக்கும்
முள்ளங்கியில் அதிக நீர் சத்து உள்ளது. இது உடலில் ஒட்டுமொத்த நீரேற்றத்திற்கு பங்களிக்கும். உடலையும் சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க நீர் சத்து இன்றியமையாதது.
மேலும் படிக்க | எச்சரிக்கை... மீண்டும் சூடு படுத்தினால் விஷமாகும் சில உணவுகள்
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்
முள்ளங்கியில் பொட்டாசியம் நிரம்பியுள்ளது. பொட்டாசியம் இரத்த நாளங்களை தளர்த்தி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்பதால், உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். மேலும், இருதயத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கிறது. முள்ளங்கி போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவுகள் இதயத்திற்கு ஆரோக்கியமான தேர்வாக இருக்கும்.
இளமையை காக்க உதவும்
முள்ளங்கியில் அந்தோசயினின்கள் மற்றும் குர்செடின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் கொண்ட சேர்மங்ள் உள்ளன. இவை உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றனஇது பல்வேறு நாட்பட்ட உடல் பாதிப்புகள் மற்றும் முதுமை காரணமான பிரச்சனைகள் ஆகியவற்றை நீக்கி, இளமையை பாதுகாக்க உதவுகிறது. உங்கள் உணவில் முள்ளங்கியைச் சேர்ப்பது ஆக்ஸிஜனேற்ற சேதத்திற்கு எதிராக உங்கள் உடலை பாதுகாக்க உதவும்.
உடல் பருமன் குறையும்
குறைந்த கலோரி மற்றும் அதிக நீர் உள்ளடக்கத்துடன், முள்ளங்கிகள் தங்கள் உடல் எடையைக் கட்டுப்படுத்த விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும். முள்ளங்கி வயிறு நிறைந்த உணர்வைத் தரும் சத்தான உணவு. முள்ளங்கியில் உள்ள நார்ச்சத்து வயிற்று பிரச்சனைகளை போக்கி, பசி உணர்வைக் கட்டுப்படுத்தும். இது ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ