Seedless Fruits For Sugar Control: இன்றைய காலகட்டத்தில் மனிதர்களுக்கு பல பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும் நோய்களில் முக்கிய்மானதாக இருப்பது சர்க்கரை நோய் என்றழைக்கப்படும் நீரிழிவு நோய். நோய்களை எதிர்த்துப் போராட, மருந்துகளுடன் சரியான உணவு முறையும் அவசியமானது. ரத்த சர்க்கரை அதிகமாக இருந்தாலோ அல்லது குறைந்தாலோ உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் பழங்கள் பல இருந்தாலும், அவற்றில் விதையில்லா பழங்கள் முக்கியத்துவம் பெருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீரிழிவு நோயை பழங்கள் மூலம் கட்டுப்படுத்தலாம். நாள்பட்ட நோயான நீரிழிவை கட்டுப்படுத்த (Sugar Control) சிகிச்சை எதுவும் இல்லை என்றாலும், கட்டுப்படுத்த மருந்துகள் பயன்படும். அதோடு, உணவு பழக்கங்கள் மற்றும் சீரான வாழ்க்கை முறை மூலம் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்.


உணவின் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது ஆரோக்கியமானது. உணவில் சிறப்பு மாற்றங்களைச் செய்யாமலேயே, அதிகபட்ச அளவு காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக் கொண்டால் போதும் என்று சுகாதார நிபுணர்களும், மருத்துவர்களும் அறிவுறுத்துகின்றனர்.


உணவு மற்றும் காய்கறிகள் என்றால், அதில் பழங்களுக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால் எவ்வளவு தான் ஊட்டச்சத்து மிக்கவைகளாக இருந்தாலும் சில பழங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை பலமடங்கு அதிகரிக்கச் செய்யும். எனவே நன்றாக யோசித்த பிறகே உணவில் பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.


விதையில்லா பழங்களில் (Seedless Fruits) சில சரியான அளவில் உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 


மேலும் படிக்க | இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பழங்கள்! கொழுப்பை குறைக்கும் சிட்ரஸ் பழங்களின் மாயம்!


சர்க்கரையை கட்டுப்படுத்த விதையில்லா பழங்கள் (Helath News In Tamil)


வாழைப்பழம்
சரியான அளவில் உட்கொண்டால் இரத்த சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும் பழங்களில் ஒன்று வாழைப்பழம். இந்தப் பழத்தில் பொட்டாசியம் உட்பட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கு பல நன்மைகளை வழங்கும் வாழைப்பழத்தை தினசி ஒன்று உண்டால் ஆரோக்கிய நன்மைகள் அதிகரிக்கும்.  


மல்பெரி பழங்கள்


மல்பெரி பழங்கள், இனிப்பான நீர்ச்சத்து கொண்ட பழம். மல்பெரி பழத்தில் இருக்கும் விதைகளின் அளவு மிகக் குறைவு, இந்த பழத்தை சாப்பிடும்போது, விதைகளும் வயிற்றுக்குச் செல்லும். மல்பெரி பழத்தை சரியான அளவுடன் உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.


அன்னாசிப்பழம்
நீரிழிவு நோயாளிகள் அன்னாசிப்பழத்தை சாப்பிடுவதில் தவறே இல்லை, ஆனால், சரியான அளவில் உட்கொள்ளும்போது, இரத்த சர்க்கரையை அதிகரிப்பதற்கு பதிலாக குறைக்க உதவும். அன்னாசிப்பழத்தில் உள்ள சிறப்பு ஊட்டச்சத்துக்கள் நீரிழிவு நோயின் சிக்கல்களைக் குறைக்கிறது.


மேலும் படிக்க | தொப்பை அதிரடியாக குறைய இந்த ஸ்பெஷல் தண்ணீரை குடியுங்கள் போதும்


திராட்சைப்பழம்
திராட்சைக்குள் விதைகள் இருந்தாலும் அவை மிகவும் சிறியவை. விதையில்லா திராட்சைகளும் கிடைக்கின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு திராட்சைப்பழம் மிகவும் நன்மை பயக்கும், ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது எல்லா உணவுகளுக்கும் பொருந்தும் பழமொழி. திராட்சையை சரியான அளவில் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் நீரிழிவு தொடர்பான சிக்கல்களைக் குறைக்கவும் உதவும்.


ஸ்ட்ராபெரி


ஸ்ட்ராபெரி நீரிழிவு நோய்க்கு மிகவும் நன்மை பயக்கும், இந்த பழத்தின் விதைகள் சிறியதாக இருக்கும். பிற பழங்களைப் போல பழத்தின் உள்ளே இல்லாமல், இந்தப் பழத்தின் விதைகள் வெளியில் உள்ளன. எனவே ஸ்ட்ராபெரியை விதையில்லா பழம் என்று சொல்லலாம்.  ஸ்ட்ராபெர்ரி இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு உகந்த பழம் ஆகும்.


(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Bad Combo: அசைவ உணவுகளுடன் சாப்பிட்டால் ஹார்மோன்களை சீர்குலைக்கும் உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ