Meat And Milk Bad Combo: உணவு என்ற வார்த்தையைக் கேட்டாலே வாயில் எச்சில் சுரக்கும். உணவு உண்டால் பசியாறும், உடலுக்கு சக்தி கிடைக்கும், ஆரோக்கியம் மேம்படும். ஆனால், பசித்தவருக்கு தான் எது கிடைத்தாலும் உண்ணலாம் என்று தோன்றும். பெரும்பாலனவர்களுக்கு உணவு என்றவுடன் அதன் சுவை தான் நினைவுக்கு வருகிறது. ஆரோக்கியத்தை கவனிப்பதை விட தங்கள் சுவை மொட்டுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கிறோம்.
ஆனால் நாம் உண்ணும் உணவு எவ்வளவு ஆபத்தானது மற்றும் தீங்கு விளைவிக்கும் என்பதை அறியாமல், பிடித்தது, சுவையானது, மணமானது என்ற ஆசைகளுக்கு முக்கியம் கொடுத்து, விபரீதமான காம்பினேஷனில் உணவு உண்கின்றனர். ஆயுர்வேதத்தின் படி, முரண்பாடான உணவுகளை ஒரே நேரத்திலோ அல்லது குறிப்பிட்ட இடைவெளியிலோ உண்ணும்போது, தோல் நோய், கீல்வாதம் மற்றும் உடலின் உள் உறுப்புகளுக்கோ பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
ஒத்துவராத உணவுகளை ஒன்றாக உண்பதும், ஒரு உணவு செரிமானம் ஆகாமல் உடலில் இருக்கும்போதே, அதற்கு முரண்பாடான உணவை உண்பதும், ஹார்மோன்களில் செலுத்தப்படும் நச்சுகளின் எண்ணிக்கையை அதிகரித்து ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும்.
எனவே, எந்த உணவுடன் எதை சேர்த்தோ அல்லது குறிப்பிட்ட மணி நேரங்களுக்குள்ளோ உண்ணக்கூடாது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதிலும், அசைவ உணவு உண்பவர்கள், சாப்பிட்ட பிறகு உடனடியாக உண்ணக்கூடாதவை என்ற பட்டியலும் உள்ளது. இதற்கு காரணம் என்ன என்பதை முதலில் தெரிந்துக் கொள்வோம்.
மேலும் படிக்க | 1 கல்லில் 2 மாங்காய்! செரிமானம்-நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேநீர்!
அசைவப் பொருட்களில் புரதம், அதிக இரும்புச் சத்து, ஆரோக்கியமான கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, மேலும் அவை ஹீமோகுளோபின் எண்ணிக்கையை பராமரிக்கவும் உடலின் சகிப்புத்தன்மையை அதிகரிக்கின்றன. ஏற்கனவே அசைவ உணவின் சத்துக்கள் உடலால் கிரகிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது, அதற்கு எதிரான உணவுகளை உடல் உள்வாங்கினால், ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டு ஒவ்வாமை உட்பட பல பிரச்சனைகள் ஏற்படலாம். இது நாளடைவில் உடலில் பல தீவிரமான பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கலாம்.
எனவே, அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு நீங்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுப்பொருட்கள் என்ன என்பதைப் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்.
அசைவ உணவுக்கு பிறகு பால்
அசைவப் பொருட்களை சாப்பிட்ட பிறகு பால் பொருட்களை குடிக்கவேக்கூடாது. ஏனென்றால் பால் உடலை குளிர்விக்கிறது, அசைவ உணவுகள் உடலை சூடாக்குபவை. இவை இரண்டையும் ஒன்றாக உட்கொண்டால், அது ஹார்மோன்களை குழப்பி, உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உடலில் ஒவ்வாமை ஏற்படும்.
அதிலும், குறிப்பாக மீன் மற்றும் பால் பொருட்கள் கொண்ட கலவையான உணவை உட்கொண்ட பிறகு, இரத்தத்தில் ஏற்படும் இரசாயன எதிர்வினை, சருமத்திற்கு நிறத்தை கொடுக்கும் ஹார்மோன்களில் பிரச்சனையை ஏற்படுத்தி, லுகோடெர்மா / விட்டிலிகோ போன்ற சருமத்தின் நிறம் மாறும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | டீக்கடைக்கு போனா இனி இதை வாங்கி குடியுங்கள்... உடலுக்கு மிகவும் நல்லதாம்!
அதேபோல், பால் குடித்த பிறகு மீன், கோழி, ஆட்டிறைச்சி சாப்பிடக்கூடாது, ஏனென்றால், இரு வகையான புரதங்களை ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளும்போது, அவை செஇமானம் ஆக பல்வேறு வகையான செரிமான சாறுகள் தேவைப்படும்.
இது உடலின் ஹார்மோனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி, இரு புரதங்களுமே செரிமானம் ஆவதில் பிரச்சனையை ஏற்படுத்தும். இவை, உடலின் செரிமான மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புகளை மோசமாக பாதிக்கிறது.
பால் மற்றுமல்ல, பால் பொருட்களான தயிர், டீ போன்றவற்றையும் அசைவ உணவுகளுடன் சேர்த்து உண்ணக்கூடாது. அதேபோல, அசைவ உணவுகளுடன், கிரீன் டீ, மூலிகை தேநீர், குளுக்கோஸ், காஃபின் மற்றும் காபி போன்ற பானங்களைக் குடிக்கக்கூடாது. இந்த பொருட்கள் உடலை சூடாக்கும் மற்றும் அஜீரணம் மற்றும் வயிற்று எரிச்சலை ஏற்படுத்தும்.
பொதுவாக, அசைவப் பொருட்களை உட்கொண்ட பிறகு, வெந்நீர் குடிக்கவும், இது உணவு விரைவாக செரிமானம் ஆக உதவும். வெந்நீர் குடிப்பதால் உடலில் படியக்கூடிய கொழுப்புகள் வெளியேறும். நாம் என்ன சாப்பிடுகிறோம், அது உடலில் எதுபோன்ற செயல்களை செய்யும், என்ன எதிர்வினையாற்றும் என்பதை உணர்ந்து உண்டால், உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ